Monday, October 29, 2012

கருவளையத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்...

இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. அதிலும் தற்போது நிறைய க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. மேலும் அவற்றை பயன்படுத்துவதால், சில சமயங்களில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே அத்தகைய பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே சிறந்தது. இப்போது அந்த கருவளைத்தை போக்குவதற்கான இயற்கைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

* எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.

* பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.

* மற்றொரு முறை ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.

* இல்லையெனில் தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கண்களில் கருவளையம் வருவதற்கு கண்கள் களைப்புடன் இருப்பதும் ஒரு காரணம். ஆகவே இந்த முறை கண்களை புத்துணர்ச்சியாக்கும்.

உண்மையான உறவில் பொறுத்துக் கொள்ள கூடாத விஷயங்கள்!!!

ஒருவரை ஒருவர் உண்மையாக காதலிக்கும் போது, வாழ்க்கைத்துணையின் சில செயல்கள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த உண்மையான காதலில் நம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் மற்றும் பொறுமை போன்றவை இருக்க வேண்டும். அவை இல்லையென்றால், அந்த நேரம் தான் நன்கு யோசிக்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் ஏதேனும் சிறு செயல்கள் கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும். அதிலும் அந்த பிரச்சனை ஒரு முறை வந்துவிட்ட பின்னும், மறுமுறையும் அந்த பிரச்சனையைப் பற்றி உங்கள் வாழ்க்கைத்துணை பேசிக் கொண்டு, அதனை நினைவுப்படுத்தி, மிகுந்த தொல்லையை கொடுத்தால், அப்போது மிகவும் கவனமாக, அவர்களுடன் இருப்பதா? வேண்டாமா? என்று நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். இப்போது அத்தகைய உண்மையான காதலில் என்னவெல்லாம் இருக்கலாம், ஆனால் பொறுத்துக் கொள்ளக்கூடாது என்பதைப் பற்றி அனுபவசாலிகள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* பொதுவாக தம்பதியர்கள்/காதலர்கள் என்றாலே அங்கு நிச்சயம் வாக்குவாதம் இருக்கும். அத்தகைய வாக்குவாதம் சில நேரங்களில் ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அந்த வாக்குவாதம் எப்போது ஒருவர் தவறு செய்த பின்னர், அதனை ஏற்காமல், அந்த விஷயத்திற்கு ஏற்படுகிறதோ, அப்போது அவர்களின் குரல் மற்றும் நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருக்கும். அதிலும் அப்போது என்று நடக்காத வன்முறை செயலான அடிப்பது இருந்தால், அந்த உறவு நிச்சயம் சரியானதாக இருக்காது. இதனால் நாளடைவில் அந்த உறவு ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆகவே அதனை பொறுத்துக் கொள்ளக்கூடாது.
* கடலைப் போடுவது, ஊர் சுற்றுவது போன்றவை கூட சில சமயங்களில் காதலர்களுக்குள் ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அதாவது காதலன் தன் காதலி முன்பே பெண்களுடன் கடலைப்போடுவது. ஆனால் அது உங்கள் வாழ்க்கைத்துணையின் முன்பு நடக்காமல், அவர்களுக்கு பின்பு நடந்தால், அது அவர்களை ஏமாற்றுவதற்கு சமம். இருப்பினும் அவர்கள் உங்களை ஏற்றுக் கொண்ட பின்னரும், மறுபடியும் தவறு செய்தால், அப்போது நிச்சயம் பொறுமையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இதனால் கூட பெரும் பிரச்சனை பிற்காலத்தில் ஏற்படும். ஆகவே இநத் நேரத்தில் நன்கு யோசிக்க வேண்டும்.
* நம்பிக்கை தான் உறவுகளுக்குள் இருக்கும் ஒரு பெரும் தூண். ஆனால் அந்த நம்பிக்கை சரியாக இல்லையென்றால், அவர்கள் எப்போதும் உங்களுக்கு போன் செய்து கொண்டே இருப்பது, உங்கள் மொபைல் போன்களை சோதித்து பார்ப்பது, நண்பர்களுடன் வெளியே செல்ல விடாமல் தடுப்பது போன்றவாறு நடந்தால், அது பெரும் தவறான செயல். ஏனெனில் இந்த செயல்கள் அனைத்தும், உங்கள் வாழ்க்கைத்துணை உங்களின் மீது நம்பிக்கையற்று இருப்பதற்கான அறிகுறி. ஆகவே இது சிந்திக்க வேண்டிய முக்கியமான நேரம்.
* எப்போது உங்கள் வாழ்க்கைத்துணை அவர்களது நண்பர்கள், குடும்பம் முன்பு உங்களை தாழ்வாக நடத்துகிறார்களோ, அந்த நேரம் மிகவும் சீரியஸாக இருக்க வேண்டும். அதிலும் இந்த உலகில் அனைவருமே எப்போதும் பெருமைப்படுத்துபவராக இருக்கமாட்டார்கள். அதற்காக அனைவரது முன்பும் சுயமரியாதையை கெடுக்கும் வகையில் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால், அது மற்றவர்களை மிகவும் உயர்வாகவும், உங்களை தாழ்வாகவும் நடத்துவதற்கு சமம் என்பது போல் இருக்கும். பின் மற்றவர்களும் உங்களை மதிக்காமல், எப்போதும் தாழ்வாகவே நடத்துவார்கள். ஆகவே எப்போதும் சுயமரியாதை கெடும் இடத்தில் இருக்கக்கூடாது.

Saturday, October 27, 2012

உடலால் மட்டுமல்ல உணர்வுகளாலும் இணையுங்கள்!

‘நீ வந்த பின்னாடிதான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சது...' ‘என் உயிரே நீதான்...' இது புதிதாய் திருமணம் ஆன தம்பதியர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள்.
இதுவே சில வருடங்கள் கழித்து என்றால் சின்னச் சின்ன ஊடல்களில் தொடங்கி ‘எந்த நேரத்தில என் வாழ்க்கையில நீ வந்தியோ அப்ப இருந்தே எனக்கு நேரம் சரியில்லை'... என்ற வார்த்தையில் வந்து முடியும்.
தம்பதியர்களுக்கு இடையே சிறு சிறு சண்டைகள், சச்சரவுகள் ஏற்படுவது வாடிக்கைதான். அதுவே பெரிய பூசலாக மாறி விரிசலை அதிகரித்துவிடக்கூடாது. என்றைக்கு மகிழ்ச்சியாக இருக்க சில விட்டுக்கொடுத்தல்கள் வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

உண்மையா இருங்களேன்...
புதிதாக திருமணமான தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தேனிலவு அனுப்புகின்றனர். இது மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டுமல்ல தம்பதியரிடையேயான எண்ணங்களையும், தேவைகளையும் பகிர்ந்து கொள்ளவும்தான். ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து கொண்டாலே வாழ்க்கைப் பயணத்தின் வெற்றி அங்கேயே தொடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

இப்ப எப்படி இருக்கீங்க?
தம்பதியர் இருவருமே திருமணத்திற்கு முந்தைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி துருவி துருவி விசாரணை செய்ய வேண்டாம். அது தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தும். திருமணத்திற்கு பின் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கிறோமா என்பதில் கவனம் செலுத்துங்கள்.

உடனே அப்டேட் செய்யணும்..
கணவனோ, மனைவியோ உங்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் விசயங்களை அவ்வப்போது உங்களின் துணையிடம் அப்டேட் செய்யுங்கள். அப்பொழுதுதான் சந்தேகம் என்ற விதை முளைக்காது. தாம்பத்யத்திலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அதை விடுத்து என்னோட பெர்சனலை ஏன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தால் சந்தோசத்திற்கு சங்கு ஊத வேண்டியதுதான்.

புரிதலும், விட்டுக்கொடுத்தலும்
தம்பதியரிடையே புரிதலும், விட்டுகொடுத்தலும் அவசியம். என் மனைவி இப்படித்தான் என்று கணவனும், என் கணவன் இப்படித்தான் என்று மனைவியும் புரிந்து கொண்டாலே பாதி சிக்கல்கள் தீர்ந்துவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் அப்புறம் சண்டைக்கு வழியே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

எப்பவும் புதுசா இருங்க
நமக்கு திருமணமாகி ரொம்ப நாள் ஆயிருச்சே இனி என்ன என்று நினைக்கவேண்டாம். திருமணமான பொழுது எப்படி புதிதாக உணர்ந்தீர்களோ அதேபோல எப்பொழுதும் புதிதாக உணருங்கள். அந்த நினைவே உங்களை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும். எங்காவது வெளியூர், வெளியிடங்களுக்கு சென்றால் சந்தோசமாக ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு செல்லுங்கள். அது உங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

எங்கேயும் எப்போதும் மதிக்கணும்
நம்ம கணவர்தானே என்று மனைவியும், நம்ம மனைவிதானே என்று கணவரும் ஒருவருக்கொருவர் அந்நியோன்னியமாய் இருந்தாலும் பொது இடத்திலோ, உறவின் முன்னிலையிலோ ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

எதிர்பார்ப்பு அதிகம் வேண்டாமே
ஒருவர் மீது ஒருவர் கூடுதலான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு அது நிறைவேறாவிட்டால் அப்புறம் சிக்கல்தான். எனவே குறைவான எதிர்பார்ப்புதான் அதிகமான நன்மைகளை ஏற்படுத்தும். எனவே ஒருவரின் வேலையை மற்றவர்கள் புரிந்து கொண்டு நேர்மறையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

உணர்வால் இணையுங்கள்
தாம்பத்யதில் இதுதான் முக்கியமானது. தம்பதியரிடையே உடல்களின் சங்கமம் மட்டும் முக்கியமில்லை அது உணர்வுப்பூர்வமானதாக அமையவேண்டும். அப்பொழுதுதான் உடலில் ஆரோக்கியமான ரசாயனங்கள் சுரக்கும். அது தம்பதியரிடையேயான உறவையும் நீடிக்கச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள்.

Wednesday, October 24, 2012

உண்மையான காதல்


உண்மையான காதல்
தோற்பதில்லை ,
உண்மையானவர்களை
தேர்ந்தெடூப்பதில் தான்
தோற்றுப்போகிறோம்...

Saturday, October 20, 2012

கர்ப்பிணிகளே! இந்த மாதிரி ஸ்டைல் பண்ணாதீங்க!!!

இன்றைய காலத்தில் ஃபேஷன் என்ற பெயரில் நிறைய செயல்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர். அத்தகைய செயல்களை கர்ப்பமாக இருக்கம் பெண்களுள் சிலரும் பின்பற்றுகின்றனர். இதனால் அழகாகத் தான் இருக்கும். ஆனால் உடல் நலம் பாதிப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே அத்தகைய செயல்களை கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இப்போது அந்த செயல்களில் எவற்றை கர்ப்பிணிகள் செய்யலாம். செய்யக்கூடாது என்பதைப் பார்போமா!!!

உயரமான ஹீல்ஸ்- தற்போது செருப்புகளில் ஹீல்ஸ் இருக்கும் செருப்புகள் தான் அதிக பிரபலம். அவற்றை சாதாரணமாக இருக்கும் போது அணிந்தாலே உடலுக்கு ஆபத்தானது. அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது அணிந்தால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அசம்பாவிதம் நடக்க நேரிடும். அதிலும் கருசிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இத்தகைய செருப்புகள் அணிவதை தவிர்ப்பது நல்லது.

டைட்ஸ்- ஆடைகளில் பலவிதமான டிசைனில் உடைகள் வந்துள்ளன. அவற்றில் நிறைய பெண்கள் அணிவது டைட்ஸ் தான். இத்தகைய டைட்ஸ் உடலை இறுக்கி, உடலை சிக்கென்று காண்பிக்கும். இவற்றை கர்ப்பிணிகள் நிச்சயம் அணியக்கூடாது. ஏனென்றால் இவற்றால் அடிவயிற்றிற்கு அழுத்தம் ஏற்பட்டு, கருவிற்கு பிரச்சனை ஏற்படும்.

மேக்-கப்- இந்த காலத்தில் மேக்-கப் போடாமல் இருக்கும் பெண்களைப் பார்ப்பதே கஷ்டம். எந்த பெண்ணும் மேக்-கப் இல்லாமல் வெளியே வரமாட்டார்கள். அதிலும் அழகுப் பொருட்களில் சாதாரணமாக பயன்படுத்தும் லிப்ஸ்டிக் மற்றும் நெயில் பாலிஷ் தான் பெரும் பாதிப்பை உண்டாக்கக் கூடியவை. எப்படியெனில் இதில் உள்ள கெமிக்கல் சிறிது வயிற்றில் சென்றாலும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து தான். ஆகவே கர்ப்பிணிகள் அழகுக்காக நெயில் பாலிஷ் போடுவதற்கு பதிலாக மருதாணியை அரைத்து வைக்கலாமே!

ஹேர் கலர்- ஹேர் கலரிங் என்பது அனைவரும் செய்யும் ஒரு செயல் தான். இதை கண்டிப்பாக கர்ப்பமாக இருக்கும் போது செய்யக்கூடாது. ஏனெனில் அனைத்து ஹேர் கலரிலும் அம்மோனியா உள்ளது. ஆகவே இதில் இருந்து வரும் வாசனையை நுகரும் போது குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை அடிக்கடி ஏற்படும். அதனால் எதையுமே சரியாக சாப்பிட முடியாது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது கெமிக்கல் கலந்த ஹேர் கலரை பயன்படுத்துவதை விட, இயற்கை பொருட்களான ஹென்னாவை பயன்படுத்தலாம்.

உள்ளாடை- கர்ப்பிணிகள் எப்போதும் உள்ளாடையை இறுக்கமாக அணியக்கூடாது. ஏனெனில் அவ்வாறு அணிந்தால் கர்ப்ப காலத்தில் உடலில் சுரக்கும் பால் உற்பத்தி தடைபடும். ஆகவே அத்தயை இறுக்கமான உடையை தவிர்த்துவிட வேண்டும்.

ஆகவே கர்ப்பிணிகளே! மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு, நடந்து வந்தால், உடலில் எந்த பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்கலாம்.

Wednesday, October 17, 2012

ரசித்து அனுபவியுங்கள்.. அலங்கோலமாக்காதீர்கள்!


பாஸட் புட் சூப்பரா இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன்றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டுக்குத்தான் அதிகம் வாக்களிப்பார்கள். அதே போலத்தான் செக்ஸும். பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு சாப்பிடுவதை விட வாழை இலை போட்டு ஒவ்வொரு ஐட்டமாக ரசித்து, ருசித்து சாப்பிடுவது போலத்தான் செக்ஸ் உறவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதை நினைத்து நினைத்து இன்புற முடியும்.
செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்வது நல்லது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வை, அதற்குரிய வகையில்தான் தணிக்க வேண்டுமே தவிர அலங்கோலமான வழியில் அதை 'ஆப்' செய்ய நினைத்தால் கசப்புணர்வுதான் இறுதியில் மிஞ்சும்.

சிலர் செக்ஸ் உறவின்போது பல தவறுகளைச் செய்வார்கள். அதைத் தவிர்ப்பது உறவுக்கும், உறவில் ஈடுபடுவோரின் மனங்களுக்கும் நல்லது. அது என்ன தவறுகள் என்பதைப் பார்ப்போமா...

நிறைய முத்தம் கொடுங்கள்

செக்ஸ் உறவின்போது பலரும் செய்யத் தவறுவது நிறைய்ய்ய்ய்ய முத்தம். இருவரும் இணையும் அந்த ரம்மியமான தருணத்தை மேலும் மேலும் இனிமையாக்க உதவுவது எண்ணிக்கைக்குள் வராத அளவு முத்தமிடுவதுதான். இங்குதான், அங்குதான் என்றில்லாமல் நினைக்கும் இடத்தில், கணக்கே இல்லாமல் முத்தமிடுங்கள். இது இருவருக்கும் இடையிலான அன்பை அதிகரிக்க உதவும். அளவு கடந்த ஆசையை தட்டி எழுப்ப உதவும். முத்தத்தைதப் போல ஒரு சக்தி வாய்ந்த எதுவுமே இல்லை. எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் உங்களது முத்தம் அவரை தட்டி எழுப்பி உங்களை ஆனந்தபுரிக்குக் கூட்டிச் செல்லும்.

அவசரப்படாதீர்கள்

உங்களது பார்ட்னரும் செக்ஸ் மூடுக்கு வர வேண்டியது அவசியம். ஆனால் பலர் அவசரம் அவசரமாக எதையாவது செய்து பார்ட்னரை டென்ஷன்படுத்துவார்கள். அதற்குத்தான் நிறைய நேரத்தை முன்விளையாட்டுக்கு செலவிட வேண்டும் என்பது. முன் விளையாட்டை அதிகரிக்கும்போது தானாகவே இருவருக்கும் நல்ல மூடு வந்து விடும்.

சரியான இடத்தில் தொடுங்கள்

முன்விளையாட்டின்போது சிலர் தேவையில்லாமல், உணர்ச்சிகள் அதிகம் வெளிக்கிளம்பாத இடங்களைத் தொட்டும், தடவியும், கடித்தும் மேலும் டென்ஷனைக் கூட்டுவார்கள். அப்படி இல்லாமல், உங்களது துணையை எந்த இடத்தில் தொட்டால் சிலிர்ப்பார், எப்படித் தொட்டால் சிரிப்பார், எந்த மாதிரி தொட்டால் சிலாகிப்பார் என்பதைத் தெரிந்து கொண்டு சரியாக குறி வைத்து விளையாடுங்கள். ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே பொதுவாக கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பகுதிகள் கிளர்ச்சியூட்டக் கூடியவை. அதேபோல ஆண், பெண் உறுப்புகளில் விளையாடுவதும் கிளர்ச்சியைக் கூட்டக் கூடியவை.

பூ போல பாவியுங்கள்

சில ஆண்களுக்கு இந்தக் கெட்டப் பழக்கம் இருக்கும். அதாவது அப்படியே ஒட்டுமொத்த உடலையும் தூக்கி தனது துணை மீது போட்டு அமுக்கி விடுவார்கள். பெண் என்ன இரும்பா அல்லது மரக்கட்டையா, உங்களது வெயிட்டை எப்படித் தாங்குவார்.. அதையெல்லாம் யோசிக்க வேண்டும். பெண்களைப் பூ போல பாவித்து கையாள வேண்டும். பூ மீது பூமி உருண்டையைத் தூக்கி வைத்தால் என்னாகும்.. எனவே மென்மையாக கையாளுங்கள். உடல் எடையை தூக்கி உங்களது துணை மீது வைத்து அவரைக் கஷ்டப்படுத்தாதீர்கள்.

மெதுவா.. மெதுவா...

கிளைமேக்ஸ் ஆண்களுக்கு எப்போதுமே சீக்கிரம் வந்து விடும். ஆனால் பெண்களுக்கு நேரம் பிடிக்கும். எனவே அதற்கேற்ற வகையில் உங்களது உறவின் வேகத்தைக் குறைத்தும், தணித்தும் விவேகமான முறையில் செயல்பட வேண்டும். அவரது இன்பத்தையும், சந்தோஷத்தையும், அனுபவிப்பையும் நீங்கள் மதித்து அதற்கேற்றார் போல நடந்து கொள்ள வேண்டும். விந்தணு வெளியேறுவதை தள்ளிப் போட நிறைய உபாயங்கள் உள்ளன. அதைக் கடைப்பிடித்து உங்களது துணையையும் களிப்பூட்டுங்கள்.

சொல்லாமல் செய்யாதீர்கள்

நீங்கள் வேகமாக உறவில் ஈடுபட்டு அதை விட வேகமாக விந்தணு வெளியிட்டு விடும் நிலை சில நேரங்களில் ஏற்படலாம். அது உங்களது துணைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். அதுக்குள்ளேயும் முடிச்சுட்டீங்களே என்று அவர் விசனப்பட நேரிடும். எனவே எனக்கு உச்சம் வந்து விட்டது என்பதை, வெளியேற்றி விடவா என்று உங்களது துணையிடம் ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள். அதற்கேற்றவாறு உங்களது துணை செயல்பட அது ஏதுவாகும்.

செக்ஸை ஆபாசமாக்கி விடாதீர்கள்

அதேபோல செக்ஸ் உறவை ஆபாசமான விஷயமாக மாற்றி விடக் கூடாது. அது ரொம்ப முக்கியம். செக்ஸ் உறவு என்பது ஒரு கலை. அதை நயத்தோடு அணுகுவதும், செயல்படுத்துவதுதான் நல்ல உறவுக்கு அழகு. நீங்கள் எதைச் செய்தாலும் அதை ரசித்து்ச செய்யுங்கள். மாறாக, அந்தப் படத்தில் அப்படிப் பண்ணானே, நாமும் அதே போலச் செய்யலாமா என்று ஆபாச பட நிலைக்கு கொண்டு போய் விடாதீர்கள். அது சீக்கிரமே உறவு கசந்து போக வழி வகுத்து விடும். அதேபோல சிலர் உறவின்போது படு ஆபாசமாக பேசக் கூடும். அதையும் தவிர்ப்பது நல்லது.

மெஷின் போல இயங்காதீர்கள்

உறவின்போது சிலர் மெஷின் போல, மரக்கட்டை போல இருப்பார்கள். அதுவும் தவறு. ஏதோ ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது போல சில ஆண்கள் இயங்கக் கூடும். அதுவும் தவறு. ரசித்து, ஒவ்வொன்றையும் ருசித்து, அனுபவித்து, அழகியலோடு செய்யும்போதுதான் உறவுகள் இனிக்கும், சுவைக்கும். உங்களது கலா ரசனையாலும், கற்பனைத் திறனாலும் உங்களது துணையைக் கட்டிப் போட வேண்டுமே தவிர 'டிரில்லிங் மெஷினைக் கொண்டு சுவற்றில் ஆணி அடிப்பது' போல செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

Friday, October 12, 2012

மனைவியை அதிகமாக கோபப்பட வைப்பது எது தெரியுமா?

 திருமணமானவர்களுள் ஆண்கள் அனைவரும் தன் மனைவியை ஒரு பெரிய இராட்சசி என்று சொல்வார்கள். ஏனெனில் எப்போது பார்த்தாலும் மனைவிகள் அனைவரும் அவர்கள் கணவர்களை கோபத்தால் திட்டிக் கொண்டே இருப்பதால், ஆண்கள் பலர் தன் மனைவிகளை பற்றி மனதில் தவறாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு நடப்பதற்கு உங்கள் மீதுள்ள பாசம் தான் காரணம். அதனால் தான் அவர்கள் உங்களுடன் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

மேலும் உண்மையான பாசம் இருக்குமிடத்தில் தானே கோபம் இருக்கும். பாசம் யார் மீது வைத்துள்ளோமோ, அவரிடம் தானே உரிமையோடு கோபம் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் முக்கியமாக மனைவிகள் எப்போதும் தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள். அவர்கள் கோபப்படுகிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் எப்போதும் பிரச்சனையை உருவாக்கி கோபப்பட வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை. அவர்களுக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு நிச்சயம் கணவர்களது செயல்களால் தான் இருக்கும். இப்போது கணவர்களது எந்த மாதிரியான செயல்கள் மனைவிகளுக்கு கோபத்தை உண்டாக்குகின்றன என்று பார்ப்போமா!!!

* ஆண்கள் அதிகமாக சம்பாதித்து நன்கு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் சாம்பாதித்தால் மட்டும் சந்தோஷம் வந்துவிடுமா என்ன? சந்தோஷம் வருவதற்கு வேலை செய்யும் நேரங்களில் வேலை செய்து, மற்ற நேரங்களில் மனைவியுடன், குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். அதைவிட்டு, அலுவலகங்களிலேயே செலவழித்தால் யாருக்கு தான் கோபம் வராது. அதிலும் எப்போதாவது வேலை இருந்தால், அதைப் புரிந்து கொண்டு மனைவி கோபப்படமாட்டாள். ஆனால் அளவுக்கு மீறி போனால், கண்டிப்பாக பத்திரகாளியாகத் தான் மாறுவாள்.

* வேலைக்கு செல்லாத மனைவியிடம் மாலை நேரத்தில் வெளியே செல்லலாம் என்று சொல்லிவிட்டு, செய்யவில்லை என்றால் கோபப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் நாள் முழுவதும் வீட்டிலேயே தான் இருக்கிறார்கள். அத்தகையவர்களை வாரத்திற்கு ஒரு நாள் தான் வெளியே அழைத்து செல்வதாக சொல்லியிருப்பீர்கள், அதைக்கூட சரியாக செய்யாமல் இருந்தால், கோபம் வராதா என்ன? ஆனால் உண்மையில் அதிக வேலையின் காரணமாக களைப்பாக உள்ளது என்று அழைத்து செல்ல முடியவில்லை என்றால், அதைப் புரிந்து கொண்டு பேசாமல், அன்புடன் வீட்டிலேயே சந்தோஷமாக இருப்பார்கள். அதைவிட்டு பொய் கூறினால், நிச்சயம் அவர்களது கோபத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

* வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால், அவர்கள் எப்போதும் கணவர்களது சம்பளத்தை எதிர் பார்க்க மாட்டார்கள். ஆனால் வேலைக்கு செல்லாதவர்கள் என்றால் அவர்கள் குடும்பத்தை சரியாக நடத்துவதற்கு கணவரிடம் பணத்தை எதிர் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் எந்த ஒரு சிறு செலவிற்கும் அவர்கள் தன் கணவனை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை. சிலசமயங்களில் அவர்கள் தரமுடியாது என்று சொல்லி, பணம் கொடுப்பதற்கு மறுப்பார்கள். அதிலும் மனைவிகள் தேவையில்லாத செலவிற்கு கேட்டு கொடுக்காமல் இருந்தால் பேசாமல் இருப்பார்கள். ஆனால் முக்கியமான செலவிற்கு கேட்டு கொடுக்கவில்லையென்றால், அந்த நேரத்தில் வரும் கோபத்திற்கு அளவே இருக்காது.

* கூட்டுக் குடும்பத்துடன் இருக்கும் போது, அதாவது மாமனார், மாமியாருடன் இருக்கும் போது, கணவர்கள் செய்யும் ரகளைக்கு அளவே இருக்காது. ஏனெனில் நாள் முழுவதும் மனையானவள் வீட்டு வேலை செய்து, பின் இரவில் படுக்கும் போது தன் கணவரிடம் அன்று நடந்ததை சொல்லி நியாயம் கேட்க வேண்டும் என்று இருக்கும் போது, கணவர்கள் மனைவியிடம் இருக்கும் நியாயத்தை பொருட்படுத்தாமல், அவர்களது அப்பா, அம்மாவிற்கே எப்போதும் சாதகமாக பேசினால், கோபம் வந்து பிபி எகிறும் அளவிற்கு பேசுவார்கள்.

ஆகவே கணவர்மார்களே! மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு உங்கள் திருமண வாழ்க்கையை நன்கு மகிழ்ச்சியானதாக மாற்றுங்கள்.

Tuesday, October 9, 2012

கர்ப்பமா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும்

பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் தான் பிரசவத்திற்கு முன். ஏனெனில் இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், அது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே எப்போதும் அலட்சியமாக இல்லாமல், எந்த நேரமும் கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு கர்ப்பிணிகளுக்கு என்று ஒருசில அடிப்படை விதிகளும் உள்ளன. இப்போது அந்த அடிப்படை கவனம் என்னவென்று பார்ப்போமா!!!

* கர்ப்பமாக இருக்கும் போது முக்கியமானது, வீட்டில் உள்ள தரைகள் எப்போதும் ஈரமின்றி இருக்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு இருந்தால், எந்த நேரத்திலும் வழுக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வீட்டில் இருப்பவர்கள், இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

* கர்ப்பத்தின் போது எந்த ஒரு சூடான பானத்தையோ, உணவையோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவை தடுமாறி உடல் மேலே விழுந்து காயம் ஏற்பட்டுவிட்டால், அது பிரசவத்தின் போது பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

* கர்ப்பிணிகளுக்கு ஒருசிலவற்றை செய்யும் போது சற்று கஷ்டமாக இருக்கும். உதாரணமாக, உயமான கட்டிலில் படுத்து எழுந்திருக்கும் போது, உட்கார்ந்து எழுந்திருக்கும் போது என்று கஷ்டம் ஏற்படும். இதனால் பெல்லியில் சிறிது அழுத்தம் ஏற்பட்டு, சிலசமயங்களில் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதாவது வழுக்கிவிடும் நிலை ஏற்படும். ஆகவே அந்த நேரத்தில் எது சுலபமாக உள்ளதோ, அதைப் பின்பற்ற அல்லது பயன்படுத்த வேண்டும்.

* கர்ப்பிணிகள் அணியும் உடை சற்று உடலுக்கு ஏற்றவாறு அணிய வேண்டும். அதாவது உடை மிகவும் டைட்டாகவோ அல்லது நீளமாகவோ இருக்க கூடாது. இல்லையெனில் தடுக்கி விழும் நிலையோ, டைட்டாக அணிவதால், வயிற்றிற்கு அழுத்தமோ ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

* வேலை செய்யும் போது கடினமான வேலையை செய்ய வேண்டாம். சிறு வேலைகளை மட்டும் செய்தால் போதுமானது. அதற்காக வேலை செய்யாமலும் இருக்க கூடாது.

* கர்ப்பத்தின் போது பெண்கள் ஓடவோ, குதிக்கவோ கூடாது. இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். அதற்காகத் தான், நிறைய மருத்துவர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்களை பயணம் செய்யக்கூடாது என்று சொல்கின்றனர். ஆகவே பயணத்தை தவிர்க்க வேண்டும்.

* அனைத்து பெண்களுக்கும் சாதாரணமாக இருக்கும் போது நாவில் இருக்கும் சுவை, கர்ப்பத்தின் போது வேறுபடும். இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. ஆகவே இந்த நேரத்தில் சற்று உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டால், தாய்க்கும் சேய்க்கும் நலம்.

ஆகவே கர்ப்பிணிகளே! மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து செயல்பட்டு, அழகான குழந்தையை ஆரோக்கியத்துடன் பெற்றெடுங்கள்.

Monday, October 8, 2012

Smile


Before I met you, 
I didn't know 
what it was like to smile 
about someone for no reason.

பெண்களின் கை ஓங்கினால்தான் நல்லதாம்...!


செக்ஸ், உறவு என்று பேசும்போது பெரும்பாலும் ஆண்கள்தான் டாமினேட் செய்பவர்களாக இருப்பார்கள். அதுதான் பொதுவான வழக்கமுமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் செக்ஸ் விஷயத்தில் பெண்கள்தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டுமாம். அப்போதுதான் அந்த உறவு சீராகவும், சிறப்பாகவும், இனிப்பாகவும் இருக்குமாம். அப்போதுதான் உறவும் முழுமை அடைகிறதாம். ஒரு ஆய்வு இப்படிச் சொல்கிறது.

பாரம்பரியாகவே ஆண்கள்தான் செக்ஸ் உறவுகளைத் தொடங்கி வைப்பார்கள், அவர்களே முடித்தும் வைப்பார்கள். தங்களது வேலை முடிந்ததும் எழுந்து போய் விடுவார்கள். அந்தக் காலம் முதல் இப்போது வரை இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. நம்முடன் உறவில் ஈடுபட்ட பெண் சந்தோஷம் அடைந்தாளா, திருப்தி அடைந்தாளா, எப்படி உணர்ந்தாள் என்று 90 சதவீத ஆண்கள் கவலைப்படுவதில்லை, கண்டு கொள்வதில்லை. செக்ஸ் என்றாலே அது ஆண்களின் ஏரியா என்பது போலத்தான் பல ஆண்கள் பார்க்கிறார்கள், அணுகுகிறார்கள்.

ஆனால் இது தவறு என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். உண்மையில் பெண்களால்தான் உறவை சிறப்பிக்க முடியும், சீராக கொண்டு செல்ல முடியும் என்பது இவர்களின் வாதம். இதை ஒரு ஆய்வு மூலம் அவர்கள் விளக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக லிசா ரோசன்தெல் என்பவரின் தலைமையிலான குழு ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட செக்ஸ் அனுபவம் நிறைந்த 357 பெண்கள் மற்றும் 126 ஆண்களிடம் கருத்துக் கேட்டனர். அந்த ஆய்வின்போது பெண்களே அதிக அளவிலான செக்ஸ் அறிவுடன் திகழ்வதாக தெரிய வந்ததாம். மேலும், ஆண்களை விட தாங்களே செக்ஸ் உறவில் அதிக டாமினேட் செய்ய விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஆண்களை விட தாங்களே சிறந்த முறையில் உறவை மேற்கொள்ள முடியும் என்று பெண்கள் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செக்ஸ் உறவின்போது பெண்களை சுதந்திரமாக விடும்போது அவர்களுக்கு நிறைய நம்பிக்கை கிடைக்கிறதாம். புதிய புதிய விஷயங்களை அவர்கள் தங்களது பார்ட்னர்களிடம் கூறி கூடுதல் கிளர்ச்சியை அடைய உதவுகிறார்களாம். இதனால் வழக்கமான உறவுகளில் கிடைக்கும் இன்பத்தை விட கூடுதல் இன்பம் கிடைக்கிறதாம்.

உடலை பொலிவாக்கும் உச்சக்கட்டம்!

உச்சக்கட்டத்தை ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். உச்சக்கட்ட நிலையில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும். சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம்.
இந்த உச்சக்கட்ட நிலையானது அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு விரிவாக்கப்படும். இந்த உச்சக்கட்ட நிலையானது மூளை சுறுசுறுப்பாக்குவதோடு உடலை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

தன்னை மறந்த நிலை

இந்த உச்சக்கட்ட நிகழ்வை அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல் மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை. சில சமயங்களில் பால் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

உற்சாகம் தரும் இயற்கை ரசாயனங்கள்

உச்சக்கட்ட நிலையின் போது உடலில் சுரக்கம் இயற்கை ரசாயனங்கள் உடல்நலத்திற்கு நன்மை தருகின்றன. மனஅழுத்தத்தை நீக்குகிறது. வலிகளை போக்குகிறது. மார்பகப்புற்றுநோய், புரஸ்டேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடலை பொலிவாக்கும் ஆர்கஸம்

உச்சக்கட்ட நிலையின்போது உடல் முழுவதும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் பாய்கிறது. இது அனைத்து நரம்புகளுக்கும் செல்வதால் சருமம் பொலிவடைகிறது என்கின்றனர் தோல்சிகிச்சை நிபுணர்கள். இதனால் இளமையுடன் திகழலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வாரத்திற்கு இரண்டுமுறை உறவின் மூலம் ஏற்படும் ஆர்கஸம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். இதனால் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிட்டு நோய் ஏற்படாமல் தடுக்கிறதாம்.

தூக்க மாத்திரை தேவையில்லை

இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஆர்கஸம் மூலம் சுரக்கும் ஆக்ஸிடோசின் சிறந்த தூக்க மாத்திரை போல செயல்படுகிறதாம். இது இதயத்தையும் பாதுகாக்கிறதாம். இஸ்ரேலில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் ஆர்கஸம் மூலம் இதயநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

மனஅழுத்தம் குறையும்

ஆர்கஸத்தின் போது மூளை சுரக்கும் காக்டெயில் ஹார்மோன்களான என்டோர்பின், செரோடோனின் மற்றும் புரோலேக்டின் மனதிற்கு அமைதியை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவதும் மன அழுத்தமும் தவிர்க்கப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

என்றென்றும் இளமை

உறவின் உச்சக்கட்டத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. இதனால் மனதும் மகிழ்ச்சியில் திளைக்கும். இது உடலின் இளமையை தக்கவைக்கிறது என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள். நியூஜெர்சியில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பெண்களுக்கு ரெகுலராக ஏற்படும் ஆர்கஸம் மூலம் வலிகள் மறையும், எலும்பு நோய், மூட்டுவலி போன்ற பிரச்சினைகள் கூட ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்களின் அழகுக்கான இரகசியம் என்ன தெரியுமா!!!!

இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். அவ்வாறு ஆசைப்படுபவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் முதலில் இருப்பார்கள். அதிலும் அவர்கள் ஒரு நாள் மேக்-கப் இல்லாத நாட்களை பார்க்கவே முடியாது. இரவில் படுக்கும் போது கூட முழு மே-கப்பில் தான் உறங்குவார்கள். அதனால் தான் அவர்கள் சருமம் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கிறது. அவ்வாறு அவர்கள் பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் முக்கியமான சிலவற்றைப் பற்றி பார்ப்போமா!!!

பாடி லோசன்: பாடி லோசன் என்பது உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை நீக்கப் பயன்படுத்தும் பொருள். நிறைய மக்கள் பாடி லோசனை முகத்திற்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் சருமம் நன்கு பட்டுப் போன்று காணப்பட்டது. ஆனால், அதே பாடி லோசனை முகத்திற்கு மட்டும் தடவாமல், உடல் முழுவதும், தடவி, பின் குளிர்ந்த நரில் குளிக்க வேண்டும்.
ஃபேஸ் க்ரீம்: உடரிர் உள்ள மற்ற பகுதிகளை விட, முகத்தில் இருக்கும் சருமம் தான் மிகவும் முக்கியமானவை. ஆகவே அப்போது ஒரு ஸ்பெஷல் க்ரீமை வாங்கி சருமத்திற்கு தடவ வேண்டும். இதனால் சூரியக் கதிர்கள். சருமத்தில் நேரடியாக பரடமல் தடுப்பதோடு, சருமம் அழகாக பொலிவோடு மின்னும்.

ஃபேஸ் வாஷ்: ஆண்கள் முகத்தை சோப்பு அல்லது ஏதேனும் ஆன்டி-செப்டிப் மூலம் தான் முகத்தை கழுவுவார்கள். ஆனால் அதுவே பெண்கள் என்றால், வீட்டு பாத்ரூமில் ஃபேஸ் வாஷ் என்ற ஒரு க்ரீமை வாங்கி பயன்படுத்தி முகத்தை கழுவுவார்கள். அவ்வாறு கழுவும் போது, அந்த ஃபேஸ் வாஷை பயனற்றது என்று எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் இதனால் சருமம் அழகாக இருப்பதோடு, எந்த ஒரு பக்கவிளைவுமின்றி பட்டுப் போன்று இருக்கும்.

ஸ்கரப்: சாதாரணமாக முகத்தைக் கழுவினால் மட்டும், முகத்தில் உள்ள அழுக்குகளான இறந்த செல்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்காது. ஆகவே அப்போது முகத்திற்கு ஸ்கரப் செய்வார்கள். மேலும் ஸ்கரப் செய்யும் போது இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி செய்வது நல்லது.
பாதத்திற்கான க்ரீம்: பாடி லோசன் எப்போதும் அனைத்து இடங்களுக்கும் சரிப்படாது. ஏனென்றால் பாத சருமமும், முகச்சருமமும் சற்று வித்தியாசமாக இருக்கும். பாத சருமம் முகச்சருமத்தை விட கடினமானது. ஆகவே அதற்கென்று விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்தினால் தான், அதற்கான பலன் கிடைக்கும். அதனால் தான் பெண்களின் பாதங்கள் மென்மையாக இருக்கின்றன.

கிளின்சிங் மில்க்: எத்தனை அழகுப் பொருட்கள் இருந்தாலும், சருமத்தை சுத்தம் செய்ய கிளின்சிங் மில்க்கை விட சிறந்தத எதுவும் இல்லை. இவை முகத்திற்கு போடும் மேக்-கப்பை எளிதில் நீக்கிவிடுவதோடு, மேக்-கப் போட்டு நீக்கியப்பின் ஏற்படும் சரும வறட்சியை தடுத்து, சருமத்திற்கு போதிய எண்ணெய் பசையைத் தருகிறது. எனவே இவற்றை முக்கியமாக அனைத்து பெண்களும் பயன்படுத்துவார்கள்.

ஆகவே அழகாக இருக்கும் பெண்களின் இரகசியம் பொதுவாக இவைகளாகத் தான் இருக்க வேண்டும். மேலும் வேறு என்னவெல்லாம் முக்கியமானது என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

கோபம் வேண்டாமே!!!


ஜென் துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார். அப்போது ஒருவர் வந்து அவரிடம், "நீங்கள் கோபப்பாமல் இருக்க காரணம் என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த குரு "எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடித்திருந்தது. அதனால் நான் தினமும் அருகிலிருக்கும் ஏரிக்கு சென்று, படகிலேயே நீண்ட நேரம் இருப்பேன். மேலும் படகிலேயே தான் தியானம் செய்வேன்.

ஒரு நாள் அதேப் போன்று படகில் அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கையில், ஒரு காலிப் படகு வந்து என் படகை இடித்தது. அதனால் நான் யாரோ கவனக்குறைவால் என் படகை இடித்துவிட்டார்கள் என்று நினைத்து, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டேன். ஆனால் என்னை இடித்த படகோ காலியாக இருந்தது. அதனால் நான் காலிப் படகிடம் கோபத்தை காண்பிப்பது முட்டாள் தனம் என்று எண்ணி அன்றிருந்து என் கோபத்தை விட்டுவிட்டேன்.

அன்று முதல் என்னை எவர் என்ன தான் திட்டினாலும், அவமானப்படுத்தினாலும், கோபப்படாமல், அப்போது நான் அந்த காலிப்படகை நினைத்து அமைதியாக சென்று விடுவேன். சொல்லப்போனால் அந்த காலிப்படகு எனக்கு ஒரு நல்ல பாடத்தை புரிய வைத்தது." என்று கூறினார்.

Sunday, October 7, 2012

அப்படி இப்படி கொஞ்சிப் பேசுங்க! உறவு அசத்தலாகும்!!

படுக்கை அறையில் தம்பதிகளின் கொஞ்சல்பேச்சு தனித்துவம் மிக்கது. மற்றநேரத்தில் என்னதான் திட்டினாலும் படுக்கை அறையில் கிசுகிசுப்பாய் துணையுடன் கொஞ்சிப்பேசுவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம். உறவின் போது என்னமாதிரி பேசினால் உங்கள் துணையை அசத்த முடியும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

பேச்சில் குஷிபடுத்துங்களேன்

வீட்டிற்குள் பெரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் தம்பதியர்களால் எதுவும் விசேசமாக பேசிக்கொள்ளமுடியாது. அப்படியே ஏதாவது பேசினாலும் கோட் வேர்டில்தான் பேசமுடியும். ஆனால் படுக்கை அறை என்பது அந்தரங்கமானது. அங்கே தம்பதியர் மட்டுமே தனித்து இருக்கும் நேரத்தில் ஒருவரை ஒருவர் செல்லப்பெயர் வைத்து கொஞ்சிக்கொள்ளலாம், சற்று கிளர்ச்சி ஏற்படும் வகையில் கிளுகிளுப்பாக பேசலாம். அதைத்தான் உங்கள் துணையும் எதிர்பார்ப்பார்களாம்.

பிடிச்சிருக்கான்னு கேளுங்களேன்

உறவின் போது ஒருசார்புடன் தனக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்வதைவிட துணைக்கு என்ன பிடிக்கும். எப்படி செயல்படலாம் என்று ஆலோசனை கேளுங்களேன். இது பிடிச்சிருக்கா. வேற எந்தமாதிரி உனக்குப் பிடிக்கும் என்று கேட்பதன் மூலம் துணை மகிழ்ச்சி அடைவார்களாம். இதனால் உறவின் போது அதிக உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

அற்புதமாக இருக்கே

அதேபோல துணையை செயல்பட விட்டு அவரின் ஒவ்வொரு செயலையும் ரசிக்கவேண்டும். ‘இது நல்லா இருக்கு செல்லம்', ‘ரொம்ப அற்புதமா இருக்கே', ‘சான்ஸே இல்லை', ‘அழகான ராட்சஷா', ‘செல்ல ராஸ்கல்' போன்ற சில கிளர்ச்சியூட்டும் வார்த்தைகளை உபயோகிக்கவேண்டும் என்கின்றனர். வெறுமனே உணர்ச்சியற்று இருப்பதை விட இதுபோன்ற கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கள் உறவின் உற்சாகத்தை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்களேன்

சமையலோ, தாம்பத்யமோ புதுசா ஏதாவது ட்ரை பண்ணாத்தான் சுவை கூடும். ஒரே இடம், ஒரே மாதிரியான செயல்பாடுகள் போரடித்துப்போனால் சுவாரஸ்யம் குறைந்து விடும். எனவே படுக்கையை இடம் மாற்றி, அறையின் அலங்காரத்தை கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி ட்ரை பண்ணுங்களேன். அன்றைக்கு ஏதோ புது இடத்தில் இருப்பதைப் போல உணர்வீர்கள். புதிதாக சில சமாச்சாரங்களை புகுத்தினால்தான் சமையலே ருசிக்கும் அப்புறம் மையலுக்கு கேட்கவா வேண்டும்

Thursday, October 4, 2012

இதயத்தை வருடுங்கள்...!

ஒவ்வொரு உறவும் புத்தம் புதிதாக பூத்த பூ மாதிரி இருக்க வேண்டும். மென்மை, நறுமணம், தனித்துவ குணம் ஆகியவை இல்லாவிட்டால் எந்தப் பூவுக்குமே மதிப்பில்லை. அது போலத்தான் உறவுகளும்.

காதலில் ஈடுபடுவோர் பலரும் இதை பல நேரங்களில் மறந்து விடுகிறார்கள். காதல் என்றால் மணிக்கணிக்கில் பேசுவது, சந்தடி சாக்கில் முத்தமிடுவது, கைகளைப் பிடித்துக் கொண்டு வசனம் பேசுவது, உடலோடு உடல் உரச சந்தர்ப்பம் கிடைக்குமா என்று காத்துக் கிடப்பது என்று சலனமாகிறார்கள். ஆனால் அதெல்லாம் பிறகுதான், அதற்கு முன்பு உங்களது காதலியின் இதயத்தை நீங்கள் வருட வேண்டும்.

ஒரு கவிஞன் சொன்னான்...
அவளது இதயத்தை வருடு, உடம்பை அல்ல
அவளது கவனத்தை திருடு, மகிழ்ச்சியை அல்ல
அவளை சிரிக்க வை, அவளது கண்ணீரை வீணாக்க விடாதே...
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் பாருங்கள். ஒவ்வொரு காதலனும், தனது காதலியை தன் பக்கம் ஈர்க்க என்னவெல்லாமோ செய்கிறான். ஆனால் பெரும்பாலானாவர்களிடம் இதயம் தாண்டி வேறு ஏதோ ஒரு எதிர்பார்ப்புதான் இருக்கிறது.

ஆனால் இதயத்தோடு நின்று பாருங்கள், சொர்க்கத்தை உணருவீர்கள். காதலியின் உடம்பை விட அவளது இதயத்தை அதிகம் நேசியுங்கள். அவள் மீது எக்கச்சக்கமான பாசத்தைக் கொட்டுங்கள். அவள் மீது அன்பை வரையறை இல்லாமல் சொரிந்து பாருங்கள். அவள் மீது அலாதிப் பிரியத்தைக் காட்டிப் பாருங்கள். பிறகு பாருங்கள், உங்களிடம் சொக்கிப் போவாள்.

அன்பை விட, பிரியத்தை விட, பாசத்தை விட பெரிய ஆயுதம் எதுவும் இல்லை. அன்புக்குத்தான் எல்லோருமே அடிமை. இதயத்தை வருடுவதில் கிடைக்கும் இன்பம், உடம்பைத் தொடுவதில் கிடைக்கும் இன்பத்தை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது.

நீ என் பிரிய சகி, நீயே என் உயிர், நீயே என் மூச்சு, நீயே என் சக்தி என்று சொல்லும்போது கிடைக்கும் சந்தோஷமும், நிம்மதியும், காதலியின் உடம்பை வர்ணிக்கும்போது சத்தியமாக கிடைக்காது. இதுதான் காதல், உடம்பு மீது பாசம் வந்தால் அது காமம்.

காதலியின் கவனத்தை ஈர்க்க எத்தனையோ வழிகள் இருக்கலாம். ஆனால் அன்பால் உங்கள் பக்கம் திருப்ப முயற்சியுங்கள். அதுதான் ஆழமான உறவுக்கு நல்ல அடித்தளமாகும். அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்றாரே வள்ளுவர், எவ்வளவு சத்தியமான வார்த்தை... அன்பை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, அதை அடைத்து வைக்க முடியாது. எப்படி வைத்தாலும் வெடித்துக் கிளம்பி வெளிவந்து உங்கள் மீது பாச மழையாக பொழியத்தானே செய்யும்... காதலுக்கும் அதுதாங்க சக்தி.

காதலியின் கண்களைப் பார்த்தாலே ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஒவ்வொரு காதலனுக்கும் வருவது இயற்கை. காரணம், அந்த காந்தக் கண்களைப் பார்த்துதானே ஒவ்வொரு ஆணும் முதலி்ல சொக்கிப் போகிறான். கண்களின் சந்திப்பை விட வேறு எந்த சந்திப்புமே பெரிதில்லை - காதலில்.

காதல் என்பது ஒரு அனுபவம். அனுபவித்துப் பார்க்கும்போதுதான் அதன் அர்த்தம், ஆழம், சுகம், வேதனை எல்லாமே புரியும். அந்தக் காதல் கடைசி வரை இதயத்தில் நீக்கமற நிறைந்திருக்க அலாதி அன்பும், அதீத பாசமும், எல்லையில்லா பிரியமும் உங்களுக்கு எக்கச்சக்கமாக வேண்டும். அதை மனம் முழுக்க நிரப்பிக் கொண்டு வாழப் பழகுங்கள், காதல் சுகமாக இருக்கும்.

Saturday, September 29, 2012

மீண்டும் மீண்டும் வேண்டும் என்கிறாரா உங்க துணை?

சிலருக்கு இந்தப் பிரச்சினை இருக்கும். அதாவது கணவனோ அல்லது மனைவியோ அல்லது காதலர்களுக்குள்ளோ, ஒருவருக்கு செக்ஸ் மீது நாட்டம் குறைவாக இருக்கும் அல்லது மூடு இல்லாமல் இருக்கும். ஆனால் இன்னொருவருக்கு எப்பப் பார்த்தாலும் அது வேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதனால் சில நேரங்களில் லடாய் கூட ஏற்படுவதுண்டு.
செக்ஸ் என்பதே உடல் ரீதியான பசி என்று சொல்லப்பட்டாலும் கூட அது மன ரீதியான உணர்வுகளின் வெளிப்பாடே. அந்த உணர்வுகள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். அப்படித் தோன்றும்போது அதை சரியான வடிகால் மூலம் வெளியேற்றி விடுவதே நல்லது. அதில் தவறு ஒன்றும் இல்லை.

ஒருவருக்கு உணர்வுகள் குறைவாக இருக்கும்போது மற்றவருக்கு அதிகம் இருப்பதில் ஆச்சரியமோ, வினோதமோ இல்லை. அது இயல்பான ஒரு விஷயம். சில நேரங்களில் இருவருக்குமே நல்ல மூடு இருக்கும், உணர்வுகள் ததும்பி வழியும். அதுபோன்ற நேரங்களில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு வந்து, இன்னொருவருக்கு மூடு இல்லாதபோதுதான் பிரச்சினை வெடிக்கிறது.

ஆனாலும் இதை எளிதில் சமாளிக்கலாம். உங்கள் துணை எப்போது பார்த்தாலும் செக்ஸ், செக்ஸ் என்று உங்களை நச்சரிக்கிறாரா, கவலையை விடுங்கள், அவரை எளிதாக சமாளிக்கலாம்.
பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கே செக்ஸ் உணர்வுகள் அடிக்கடி எழும். அதிலும் சிலருக்கு அபரிமிதமாக இருக்கும். சில பெண்களுக்கு தினசரி கூட செக்ஸ் உறவு தேவைப்படும். ஆனால் அதை சமாளிக்கக் கூடிய மன நிலை பல ஆண்களுக்கு இருப்பதில்லை. இதனால் அந்தப் பெண்கள் ஏமாற்றமடைகிறார்கள்.

இருப்பினும் சில டிப்ஸ்களைக் கையாண்டால் அதை எளிதாக சமாளிக்கலாம்....

முதலில் உங்களது மனைவி அல்லது காதலியுடன் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசுங்கள். அவரது செக்ஸ் தேவை என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முயற்சியுங்கள். உங்களால் எப்படி முடியும், என்ன முடியும், எந்த சமயத்தில் சாத்தியம் என்பதை உங்களது மனைவி அல்லது காதலிக்கு மென்மையான வார்த்தைகளில் விளக்கிச் சொல்லுங்கள். உங்களது வேலைப்பளு குறித்து விளக்குங்கள், உங்களது உடல் நலம் குறித்துச் சொல்லுங்கள். இந்த விவாதம் மிகவும் மென்மையானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களது கெப்பாசிட்டி குறித்து அவருக்குப் புரியும் வகையில் விளக்கி விட்டால், அதற்கேற்ப அவரும் உறவுகளை திருத்திக் கொள்வார், காதலும், காமும், பிரச்சினையில்லாமல் கை கோர்த்துச் செல்ல இது உதவும்.

அடிக்கடி காமவயப்படுவது நோயோ அல்லது பிரச்சினையோ அல்ல. அது இயல்பான உடல் வேட்கைதான். இதை உங்களது மனைவிக்கு நீங்கள் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதே போல எப்போதெல்லாம் நாம் இயல்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் எனப்தையும் அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதேபோல அவரது தேவைகள், கருத்துக்களையும் உன்னிப்பாக கேளுங்கள். போதுமான செக்ஸை நான் தருகிறேன், அதற்காக இவ்வளவு நேரம் வேண்டும், இந்த நேரமெல்லாம் வேண்டும் என்று எதிர்பார்க்காமல் ஒவ்வொரு முறையும் திருப்தி கிடைக்கிறதா என்பதை மட்டும் பார் என்று அவரிடம் விளக்கிச் சொல்லுங்கள். 'குவான்டிட்டி'யை விட 'குவாலிட்டி'யே முக்கியம் என்பதை அவரிடம் விளக்கிச் சொல்லுங்கள், நிச்சயம் புரிந்து கொள்வார்.

நீ ஒரு செக்ஸ் அடிமை அல்ல என்பதையும் உங்களது மனைவி அல்லது காதலிக்குப் புரிய வையுங்கள். இதை நினைத்து வருத்தப்படாதே, இது இயல்பானதுதான். அதேசமயம், உனது உணர்வுகளுக்கு நான் நிச்சயம் பட்டினி போட மாட்டேன், தேவைப்படும்போது தருவேன், அதேசமயம், நீயும் நினைத்த நேரத்தில் எதிர்பார்க்காதே, அது மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே நீயே திட்டமிட்டு கூறு, அதன்படி செயல்படுவோம் என்று அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

முக்கியமாக, எந்தக் காரணத்தைக் கொண்டும் மனைவி அல்லது காதலி செக்ஸ் தேவை என்று கேட்கும்போது அதைத் தவிர்க்க முயலாதீர்கள், தப்பிப் போக நினைக்காதீர்கள். மாறாக அப்போது உள்ள உங்களது மனநிலைக்கு ஏற்ப அவரிடம் பக்குவமாக கூறி அதற்கேற்ற வகையில் சின்னதோ, பெரியதோ நிச்சயம் உறவு வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் மீதான உங்களது துணையின் எதிர்பார்ப்பை ஏமாற்றத்தில் தள்ளாமல் இருக்க உதவும்.
வார இறுதி நாட்களை சிறப்பாக மாற்றியமையுங்கள். வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அவர் கேட்பதையெல்லாம் செய்யுங்கள், சொல்வதையெல்லாம் செய்யுங்கள். அதற்கேற்ப உங்களது பணி நேரம், பெர்சனல் வேலைகளை மாற்றிக் கொள்ளுங்கள். இது உங்கள் மீது அவருக்கு பாசம் அதிகரிக்க உதவும்.

மொத்தத்தில் உங்களது மனைவியின் தேவையை சரியாகப் புரிந்து கொண்டு, உங்களது நிலையையும் அவருக்கு விளக்கி இருவரும் ஒரு சேர ஒரு முடிவெடுத்து அதன்படி செயல்படும்போது எந்தப் பிரச்சினையும் உங்களுக்கு மத்தியில் ஊடுறுவ முடியாது.

என்னோடுதான்

நீ
வேறு ஆண்களுடன்
பேசாதே என்று கட்டளை இடமாட்டேன் ..
ஏன் என்றால் ..
நீ என்னிடம் உள்ள நற்குணங்களை
அறியாமலே இருந்துவிடுவாய் 
பழகி பார் மற்றவர்களுடன் என்னோடுதான்
வாழ எண்ணுவாய் .. ♥

உனக்காக

தினமும் நான் உறங்கும் போது
என் நெஞ்சில் நீ தலை சாய்ந்து
தூங்குவது போல் என் நினைவலைகளை
அலங்கரிக்கிறேன் ..

உன்னை கேளாமல் உன்னை என்
தூக்கத்தில் சேர்த்து கொண்டமைக்கு
மன்னிப்பு கேக்குறேன் ... ♥

Wednesday, September 19, 2012

சண்டையா? சீக்கிரம் சமாதானமாயிடுங்களேன்!


சண்டை போடாத தம்பதியர் யாரும் இருக்கமாட்டார்கள். சண்டை இல்லாவிட்டால் வாழ்க்கையானது உப்புச் சப்பில்லாத உணவாகப் போய்விடும். தம்பதியரிடையே சண்டை வர பல காரணங்கள் இருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினை, உறவினர்களை கவனிப்பது, ஈகோ, சந்தேகம் போன்ற காரணங்களினால் சண்டை ஏற்படும். தவிர்க்க முடியாத காரணங்களினால் சண்டை ஏற்பட்டால் பேசாமல் மட்டும் இருந்து விடாதீர்கள் அப்புறம் அதுவே விரிசலுக்கு காரணமாகிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

தகவல் தொடர்பு குறை
தம்பதியரிடையே பேச்சுவார்த்தை குறைந்தாலே ஏதோ சிக்கல் என்று அர்த்தம். இதுவே சண்டைக்கு முதல் விதையாக அமைகிறது. எனவே எதுவென்றாலும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை. தான் சொல்வதுதான் சரி என்று எப்போது நிற்காதீர்கள். வாழ்க்கைத் துணை என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்துக் கேளுங்கள். சில விசயங்களை பேசுவதை கேளுங்கள் இணக்கம் அதிகமாகி சண்டை ஏற்படுவது தவிர்க்கப்படும்.

பொருளாதாரப் பிரச்சினைகள்
தம்பதியரிடையே சண்டை வர முக்கியகாரணியாக பணப்பிரச்சினை முன்நிற்கும். அதிகம் செலவு செய்வது யார் என்பதில் தொடங்கி, எதனால் செலவு ஏற்படுகிறது என்பது வரை அலசி ஆராய்ந்து சண்டை போடுவார்கள். எனவே பணத்தை வெளிப்படையாக கையாளுங்கள் சண்டை ஏற்பட வாய்ப்பே இல்லை.

உறவுகளை கவனிப்பது
மனைவி வீட்டு உறவுகளோ, கணவர் வீட்டு உறவுகளோ இருவரையும் சமமாக மதிக்கும் பட்சத்தில் எந்தவித பிரச்சினைகளும் எழ வாய்ப்பே இல்லை. தன் வீட்டு உறவுகளை மட்டும் மதித்துவிட்டு துணையின் வீட்டு உறவுகளை தவிர்த்தால் நிச்சயம் சண்டை ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

சமாதானமாகிவிடுங்கள்
சண்டை வந்தால் அதை வெளிப்படுத்திவிடுங்கள். மவுனமாக இருந்துவிட்டால் அப்புறம் சிக்கல் அதிகமாகி அதுவே தீர்க்க முடியாத பிரச்சினையாகிவிடும். ஏனெனில், மவுனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மவுனமாகிவிடுவது பெரும் ஆபத்தாகும். தேவையற்ற எண்ணங்கள் மனதில் தோன்றி பின்னர் இருவருக்கும் இடையே எதிர்மறை எண்ணங்கள் குடியேற காரணமாகிவிடும்.

ஈகோ வேண்டாம்
தம்பதியர் இருவரும் மவுனமாக இருப்பதால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.

எனவே ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், நன்றாக கத்தி சண்டை போடுங்கள், எந்த சமயத்திலும் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். சில மணிநேரம் கழித்து ஏதாவது சாக்கு வைத்து பேசி சமாதானத்திற்கு வழி தேடுங்கள். இதுதான் உண்மையான தாம்பத்திற்கு வெற்றி என்கின்றனர் நிபுணர்கள்.

Saturday, February 11, 2012

அரவணைப்பு….. சில முத்தங்கள்… கணவரின் மனம் கவரும்!

தம்பதியரிடையே சின்ன சின்ன ஊடல்கள் ஏற்படுவது வாடிக்கை. அதனையே ஊதிப்பெரிதாக்கி விரிசல் ஏற்படுத்தாமல் அன்பால் அதை சரியாக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், கணவரின் மனம் கவரவும் சில வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள்.

அன்பால் அரவணைப்பு

குடும்பத்தில் முதல் பிரச்சினையே பெற்றோர்களை கவனிப்பதில்தான் ஏற்படுகிறது. நம்முடைய பெற்றோர்களை எப்படி கவனிக்கிறோமோ அதேபோல கணவரின் பெற்றோர்களையும், கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். அன்பால் அரவணைத்து அவர்களுக்கு மரியாதை அளித்தால் கணவரின் குட் புக்கில் டாப் தான் நீங்கள்.

கணவருக்காக சமையுங்கள்

கணவரின் மனம் கவர முதலில் அவரது வயிற்றுக்கு சரியான விருந்தளிக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவிப்பர். எனவே சுவையாக சமைத்து சூடாக பரிமாருங்கள். வார இறுதி நாட்களில் ஸ்பெசல் சமையலாக இருக்கட்டும். அப்புறம் நீங்களும் அவருக்கு ஸ்பெசல்தான்.

மனதிற்குள் மத்தாப்பு
கணவரின் துணிகளை துவைத்துப் போடுவது ஒரு கலை. திருமணத்திற்கு முன் யார் வேண்டுமானாலும் துணிகளை துவைத்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய துணிகளை மனைவி துவைத்துப் போடுவது கணவரின் மனதிற்குள் மத்தாப்பு பூக்கும்.

இனிமையான இரவு விருந்து
இரவு நேரத்தில் கணவரின் வருகைக்காக காத்திருந்து உண்பது உங்கள் மீதான அபிப்ராயத்தை அதிகரிக்கும். தனக்காக தன் மனைவி பசியுடன் காத்திருப்பாள் என்ற எண்ணமே கணவரின் மனதில் காதல் உணர்வுகளை அதிகரிக்கும். அப்புறம் சண்டையாவது ஒன்றாவது.

அழகாய் அசத்தலாம்

கணவருக்கு பிடித்தமான உடை அணிவது அவரது கண்ணை மட்டுமல்ல காதலையும் அதிகரிக்கச் செய்யும். அதுதான் திருமணமாகிவிட்டதே, இனி என்ன என்று உடலை கண்டுகொள்ளாமல் விடுவது குடும்ப வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும். எனவே உடலை கச்சிதமாய் வைத்திருங்கள். அதற்கேற்ப உடையணிந்தால் கணவர் உங்கள் கைகளில் என்பதை நீங்களே உணர்வீர்கள்.

கொஞ்சமாய் பேசுங்கள் நிறைய கேளுங்கள்

எப்பவுமே லொட லொட என நீங்கள் பேசிக்கொண்டிருப்பதை விட கணவரை பேசவிட்டு நீங்கள் கேளுங்கள். இது உங்கள் மீதான பாசத்தை அதிகரிக்கும். நம் பேச்சை கேட்க ஆள் வந்துவிட்டார் என்று அவரை அதீத உற்சாகத்தில் ஆழ்த்தும்.

கை கோர்க்கும் காதல்

இறுதியான, முக்கியமானது படுக்கையறையில் வெற்றிகளை விட தோல்விகள் தான் அதிகம் விரும்பத்தக்கதாக உள்ளது. எனவே விட்டுக்கொடுங்கள். அவர் தடுமாறினாலும் நம்பிக்கையூட்டுங்கள். நீங்கள் தோற்பது அவரது மனதில் இடம் பெறுவதற்கான வெற்றிக்கு வழி வகுக்கும்.