Monday, August 8, 2011

மவுனம் பேசியதே

என்னென்னவோ
பேச எண்ணிய 
என் உதடு 
உன்னைக் கண்டதும் 
மவுன மானது !
ஆனால்
மவுனமாய் இருந்த 
என் விழிகள் 
உன்னிடம் 
பேச ஆரம்பித்தது !

நெருக்கடி

வளையல், 
கொலுசை கழற்றி 
வைத்தபின்  
சாந்தி முகூர்த்தம்....
கூட்டு குடும்பம் !!!

Thursday, August 4, 2011

அழியாத கோலங்கள்

உன் வீட்டு
முற்றத்தில்..
நித்தம் நித்தம் 
நீ அழித்து
கோலமிட்டாலும் 
என் இதய 
மாடத்தில் 
அழிவதில்லை 
உன் கோலம் !

அன்பு மழை

என் உயிரே,
மேகத்தை காட்டிலும் நீ 
மிகச் சிறந்தவள் !
அன்பை மழையாய் பொழிவதில் !!

காதல் மின்னல்

மின்னலை பார்த்தால் 
கண்கள் போய் விடுமாம் 
எனக்கு இதயம் 
போய் விட்டது 
உன் கண்களில் தெறித்த 
காதல் மின்னலை
பார்த்ததால் !

ஆறுதல்

என் காதலை 
மறுத்து 
எனை காயப்படுத்தினாலும்,
அவ்வப்பொழுது
மருந்து போடுகிறது
உன் பார்வை !


கிறுக்கல்

இப்போழுதும்
இனிமையாகவே 
இருக்கிறது...
எப்போதோ 
எழுதி கிறுக்கிய
என் பழைய 
நோட்டு  புத்தகத்திற்குள்
உன் பெயர் !

 

காதல் வலி

என் உயிரே,
சூரியன் சுட்டு 
எரித்ததையும்
நெடுந்தொலைவை
கணநேரத்தில் 
கடந்ததையும் 
காலில் முள் தைத்து 
வலித்ததையும்
சற்றும் உணர முடியவில்லை !
நீ காத்திருப்பதாக
கூரிய 
அந்த இடத்தை 
அடையும் வரை !!



பதினாறு செல்வங்கள்

  1. கல்வி
  2. அறிவு
  3.ஆயுள்
  4.ஆற்றல்
  5.இளமை
  6.துணிவு
  7.பெருமை
  8.பொன்
  9.பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்லொழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி