தென்மேற்குப் பருவக்காற்று
சில்லென்று வீசும் நேரம்
வைகை ஆற்றங்கரையின்
படித்துறையில் அமர்ந்து
பலதும் பேசினாய்….
என் தாகம் தணிக்க
பதநீரில் இளநுங்கு கலந்து
பருகத்தந்தாய்…
எங்கிருந்தோ வந்த
மலரின் மகரந்தம்
என் நெற்றியில் அமர
அது கூட பொறுக்காமல்
உன் சுட்டு விரலால்
தட்டிவிட்டாய்…
உன் விரலுக்குள்
இத்தனை சக்தியா?
நீ எனைத் தொட்டது
உயிர்வரை இனிக்குதடா!
No comments:
Post a Comment