Thursday, June 23, 2011

காதலை உணர்த்தும் கண்கள்!

நீ புன்னகைக்கும் போது
உன் உதடுகளை விட
கண்களே அதிகம் சிரிக்கின்றன….

உன் நேசத்தை உணர்த்த
ஒரு பார்வை போதும்
அது கூறும் ஆயிரம் வார்த்தைகள்…

உன் விரல் தொடும் முன்பே
எனை நெருங்கும்

உன் பார்வையின் ஸ்பரிசம்
பட்டாம்பூச்சியின் சிறகுகளைப் போல
எனை வருடிச் செல்லும்….

பாசமோ, பரிவோ
காதலோ, காமமோ
எதையும் நொடியில்
புரியவைத்துவிடும் உன் கண்கள்….

உன் உள்ளத்தில் உள்ளதை
உள்ளபடி வெளிப்படுத்தும் கண்களுக்கு
என்ன பரிசு தருவது ?

என் இதயச் சிம்மாசனத்தில்
கொலுவிருக்கும்
இனியவளே!

எப்பொழுதும் உன் பார்வை
எனைச் சுற்றியிருக்க
எனக்கொரு வரம் தருவாயா?

No comments:

Post a Comment