Friday, June 10, 2011

இன்னும் தொடர்கிறாய்

பல்வேறு பாதைகள்
பலவித பயணங்கள்
வாழ்க்கைப் பயணத்தில்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
அறிமுகமான
புதுவித மனிதர்கள்….

ரயில் சிநேகமாய்
எல்லோரும்
ஆங்காங்கே இறங்கிவிட…

நீ மட்டும்தான்
உடலோடு ஒட்டியிருக்கும்
உயிரைப்போல
இன்னும் தொடர்கிறாய்….

No comments:

Post a Comment