யாரையுமே முழுமையாக
நம்பி விடாதே.....
ஒரு நாள் அவர்கள் தரும் ஏமாற்றத்தை
தாங்கி கொள்ள
முடியாமல் போகலாம்....
Wednesday, June 29, 2011
Tuesday, June 28, 2011
காதல் பயணம்
நின்றபடியே
நெடுந்தொலைவு
பேருந்து பயணம்...
ஆனாலும் அசதி இல்லை
எதிர் இருக்கையில்
அமர்ந்தபடி நீ !
நெடுந்தொலைவு
பேருந்து பயணம்...
ஆனாலும் அசதி இல்லை
எதிர் இருக்கையில்
அமர்ந்தபடி நீ !
Friday, June 24, 2011
Thursday, June 23, 2011
சிந்தும் மழைத்துளியிலும் நீயே!
ஊர்வலம் போகும்
கார்கால மேகங்கள்
சிந்தும் மழைத்துளியில்
நீயே சிரிக்கின்றாய்!
உடலை வருடும்
இதமான குளிர்காற்று
உரசும் போதெல்லாம்
உன் விரல் தொட்ட ஞாபகம்!
மலர்களின் சுகந்தம் கூட
உன் வாசனையை மட்டுமே
தாங்கி வருகின்றன!
எத்தனையோ முறை
நேரில் பார்த்தும்
எதுவும் சொல்லத் தோன்றவில்லை….
ஆனால்
கனவில் தினமும் வரும்
உன் முகம் பார்த்து கூறுகின்றேன்
என் உயிர் நீதான் என்பதை!.
கார்கால மேகங்கள்
சிந்தும் மழைத்துளியில்
நீயே சிரிக்கின்றாய்!
உடலை வருடும்
இதமான குளிர்காற்று
உரசும் போதெல்லாம்
உன் விரல் தொட்ட ஞாபகம்!
மலர்களின் சுகந்தம் கூட
உன் வாசனையை மட்டுமே
தாங்கி வருகின்றன!
எத்தனையோ முறை
நேரில் பார்த்தும்
எதுவும் சொல்லத் தோன்றவில்லை….
ஆனால்
கனவில் தினமும் வரும்
உன் முகம் பார்த்து கூறுகின்றேன்
என் உயிர் நீதான் என்பதை!.
காதலை உணர்த்தும் கண்கள்!
நீ புன்னகைக்கும் போது
உன் உதடுகளை விட
கண்களே அதிகம் சிரிக்கின்றன….
உன் நேசத்தை உணர்த்த
ஒரு பார்வை போதும்
அது கூறும் ஆயிரம் வார்த்தைகள்…
உன் விரல் தொடும் முன்பே
எனை நெருங்கும்
உன் பார்வையின் ஸ்பரிசம்
பட்டாம்பூச்சியின் சிறகுகளைப் போல
எனை வருடிச் செல்லும்….
பாசமோ, பரிவோ
காதலோ, காமமோ
எதையும் நொடியில்
புரியவைத்துவிடும் உன் கண்கள்….
உன் உள்ளத்தில் உள்ளதை
உள்ளபடி வெளிப்படுத்தும் கண்களுக்கு
என்ன பரிசு தருவது ?
என் இதயச் சிம்மாசனத்தில்
கொலுவிருக்கும்
இனியவளே!
எப்பொழுதும் உன் பார்வை
எனைச் சுற்றியிருக்க
எனக்கொரு வரம் தருவாயா?
உன் உதடுகளை விட
கண்களே அதிகம் சிரிக்கின்றன….
உன் நேசத்தை உணர்த்த
ஒரு பார்வை போதும்
அது கூறும் ஆயிரம் வார்த்தைகள்…
உன் விரல் தொடும் முன்பே
எனை நெருங்கும்
உன் பார்வையின் ஸ்பரிசம்
பட்டாம்பூச்சியின் சிறகுகளைப் போல
எனை வருடிச் செல்லும்….
பாசமோ, பரிவோ
காதலோ, காமமோ
எதையும் நொடியில்
புரியவைத்துவிடும் உன் கண்கள்….
உன் உள்ளத்தில் உள்ளதை
உள்ளபடி வெளிப்படுத்தும் கண்களுக்கு
என்ன பரிசு தருவது ?
என் இதயச் சிம்மாசனத்தில்
கொலுவிருக்கும்
இனியவளே!
எப்பொழுதும் உன் பார்வை
எனைச் சுற்றியிருக்க
எனக்கொரு வரம் தருவாயா?
Thursday, June 16, 2011
ஆசை
பேருந்தை விட்டு
எழுந்த பின்பும்
நீ அமர்ந்த இடத்தில்
ஆசையாய் அமர்ந்திருக்கின்றன
உன் கூந்தலில் இருந்து குதித்த
நான்கு மல்லிகைபூக்கள்...!
எழுந்த பின்பும்
நீ அமர்ந்த இடத்தில்
ஆசையாய் அமர்ந்திருக்கின்றன
உன் கூந்தலில் இருந்து குதித்த
நான்கு மல்லிகைபூக்கள்...!
பெண்களின் மனதை கவரும் வழிமுறைகள்
கவர முயற்சிக்க வேண்டாம்
இது என்ன விளையாட்டு? என்று ஏராளமானோர் கேட்பது காதில் விழுகிறது. நிஜமாகவே இது உண்மைதான். நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம்தான். பெண்கள் விசயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம்தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.
நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.
புத்திசாலித்தனத்தை நிரூபியுங்கள்
பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீதுதான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.
புதிதாக சிந்தியுங்கள்
பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது!. எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவரைவேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
தோற்றம் முக்கியம்
என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம், போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும். உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போகவேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பெண்களின் மன ஆழம்
பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விசயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும் ? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள். இன்றைய 21- ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வன் ஆவது நிச்சயம்.

உயிர்வரை இனிக்குதடா...!
தென்மேற்குப் பருவக்காற்று
சில்லென்று வீசும் நேரம்
வைகை ஆற்றங்கரையின்
படித்துறையில் அமர்ந்து
பலதும் பேசினாய்….
என் தாகம் தணிக்க
பதநீரில் இளநுங்கு கலந்து
பருகத்தந்தாய்…
எங்கிருந்தோ வந்த
மலரின் மகரந்தம்
என் நெற்றியில் அமர
அது கூட பொறுக்காமல்
உன் சுட்டு விரலால்
தட்டிவிட்டாய்…
உன் விரலுக்குள்
இத்தனை சக்தியா?
நீ எனைத் தொட்டது
உயிர்வரை இனிக்குதடா!
சில்லென்று வீசும் நேரம்
வைகை ஆற்றங்கரையின்
படித்துறையில் அமர்ந்து
பலதும் பேசினாய்….
என் தாகம் தணிக்க
பதநீரில் இளநுங்கு கலந்து
பருகத்தந்தாய்…
எங்கிருந்தோ வந்த
மலரின் மகரந்தம்
என் நெற்றியில் அமர
அது கூட பொறுக்காமல்
உன் சுட்டு விரலால்
தட்டிவிட்டாய்…
உன் விரலுக்குள்
இத்தனை சக்தியா?
நீ எனைத் தொட்டது
உயிர்வரை இனிக்குதடா!
மாற்றங்களை ஏற்றுக் கொண்டால் ஏமாற்றமில்லை!
மகிழ்ச்சியும், துக்கமும் இணைந்ததுதான் வாழ்க்கை. இதனை உணர்ந்து கொள்பவர்களின் பயணம் தெளிந்த நீரோடையாக நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால் எதற்கெடுத்தாலும் கண்டிசன் போடும் இன்றைய இளம் தலைமுறையினர்தான் செய்வதறியாது தடுமாறி நிற்கின்றனர். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் இருக்கிறது வாழ்க்கைக்கான வெற்றியின் ரகசியம்.

புனிதமான பந்தம்
சீர்வரிசையும், வரதட்சணையும் கொடுத்துதான் திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இது பண்டமாற்று வியாபாரமல்ல. புனிதமான உறவின் தொடக்கம் என்பதை இருவருமே புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்குமே ஆசைகள், லட்சியங்கள் இருப்பது போல நம்மை திருமணம் செய்துகொண்டவருக்கும் கனவுகள் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனை சிதைத்து விடவும் கூடாது. திருமணத்திற்கு முன்பே சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.
எல்லையற்ற அன்பு
வாழ்க்கைத்துணையை கரம் பற்றிய நிமிடத்திலேயே இருவரும் ஒருவருக்கொருவர் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்ற உறுதிமொழியே தடுமாற்றம் இன்றி பயணம் செல்ல வழிவகுக்கும்.
மகிழ்ச்சியுடன் தொடங்கும் மணவாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக இருப்பது என்பது மணமக்களின் கைகளில்தான் உள்ளது. வெவ்வேறு பழக்க வழக்கங்கள் உள்ள குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து எல்லையற்ற அன்பு பாராட்டுங்கள்.
நம்பிக்கைதான் எல்லாமே
மணவாழ்க்கையில் ஒன்றாக இணைந்த இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் வாழத் தொடங்கவேண்டும். ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. தாம்பத்யத்தில் இருவரின் உடலும் சங்கமிப்பது போல லட்சியப்பயணத்தில் தடையாக நில்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.
யாதார்த்தமாய் வாழுங்கள்
சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும்.
சிறு சிறு கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன்’ என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்துவிடும்.
அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்
திருமணம் முடிந்ததும் கணவனோ, மனைவியோ இருவருமே ஒருவரைப் பற்றி ஒருவர் ஆராயத் தொடங்கக் கூடாது. ஏனென்றால் உறவுப்பாலம் சிதைவதற்கான முதல் வித்து இதில்தான் தொடங்குகிறது.
இருவருமே வெவ்வேறு சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால் அவரவரின் குறை நிறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். யாரும் யாருக்காகவும் மாறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காலச் சூழலில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும்.
Monday, June 13, 2011
Friday, June 10, 2011
தண்டவாள காதல்
விட்டு விலகி
வெகு தூரம்
போனாலும்
தொட்டுக் கொள்ளும்
தூரத்தில் தான்
நீயும் நானும் !
தண்டவாளங்கள் போல்
அருகருகே நாம் !
சேர்த்து வைக்கும்
தொடர் வண்டி போல்
நம் காதல் !
வெகு தூரம்
போனாலும்
தொட்டுக் கொள்ளும்
தூரத்தில் தான்
நீயும் நானும் !
தண்டவாளங்கள் போல்
அருகருகே நாம் !
சேர்த்து வைக்கும்
தொடர் வண்டி போல்
நம் காதல் !
இன்னும் தொடர்கிறாய்
பல்வேறு பாதைகள்
பலவித பயணங்கள்
வாழ்க்கைப் பயணத்தில்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
அறிமுகமான
புதுவித மனிதர்கள்….
ரயில் சிநேகமாய்
எல்லோரும்
ஆங்காங்கே இறங்கிவிட…
நீ மட்டும்தான்
உடலோடு ஒட்டியிருக்கும்
உயிரைப்போல
இன்னும் தொடர்கிறாய்….
பலவித பயணங்கள்
வாழ்க்கைப் பயணத்தில்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
அறிமுகமான
புதுவித மனிதர்கள்….
ரயில் சிநேகமாய்
எல்லோரும்
ஆங்காங்கே இறங்கிவிட…
நீ மட்டும்தான்
உடலோடு ஒட்டியிருக்கும்
உயிரைப்போல
இன்னும் தொடர்கிறாய்….
Subscribe to:
Comments (Atom)