Wednesday, January 2, 2013

வாழ்க்கைத் துணையுடன் சண்டையா? ஈஸியா சரிசெய்யலாம்

வாழ்க்கைத் துணையுடன் சண்டையா? ஈஸியா சரிசெய்யலாம்

உறவுகளுக்குள் சண்டைகள் வருவது சாதாரண விஷயம். அவ்வாறு வரும் சண்டைகள் தான் அந்த உறவை நீண்ட நாட்கள் நிலைக்க வைக்கும். சண்டை வராத உறவுகளை விட, சண்டை வந்தால் தான் நல்லது என்று நிறைய பேர் சொல்வார்கள். அது உண்மை தான். ஆனால் அவ்வாறு வரும் சண்டைகள் நீண்ட நாட்கள் நிலைக்கக் கூடாது. அவ்வாறு நிலைத்தால், அவை அந்த உறவுக்கே முறிவை ஏற்படுத்தும். எந்த ஒரு சண்டையும் ஒரு நாளுக்குள் முடிந்துவிட வேண்டும். இவ்வாறு வரும் சண்டையில் ஈகோ இருக்கவே கூடாது. அது அந்த உறவை வாழ்நாள் முழுவதும் ஒன்றுசேர விடாமல் செய்து விடும்.

எனவே எந்த ஒரு சண்டைகள் வந்தாலும், அவற்றை விரைவில் முடிப்பதற்கு முயல வேண்டும். தாமதம் ஆகிவிட்டால், பின்னர் சேர்வது என்பது கடினமாகவிடும். இப்போது அவ்வாறு சண்டைகள் வந்தால், என்னவெல்லாம் செய்தால், சண்டையானது சரியாகும் என்பதை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத்துணையுடன் போட்ட சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே!!!

* வாழ்க்கை துணையுடன் சண்டை போட்டு, ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இரவு வந்தால், அந்த சண்டையை சரிசெய்துவிட வேண்டும். ஏனெனில் இந்த நேரம் தான் இருவரும் அமைதியாக மனம் விட்டு பேச முடியும். அதிலும் படுக்கும் போது, துணை கோபமாக இருந்தால், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து, மற்றவரின் அருகில் சென்று அவர்களை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, அவர்களது கோபத்தை அடக்க வேண்டும். இவ்வாறு செய்தால், யாராக இருந்தாலும் உருகிவிடுவார்கள். அதுமட்டுமின்றி, படுக்கும் போது அவர் தள்ளிப் படுத்தால், அவரைத் தெரியாமல் தொட்டது போன்று தொட்டுவிட்டு, உடனே சாரி என்று சொல்லிப் பாருங்கள். இது அவர்களது உணர்ச்சியைத் தூண்டி, அவர்களது கோபமானது வித்தியாசமாக மாறி, பின் என்ன ஒரே குஜால் தான்!!!

* சில நேரங்களில் துணையின் கோபத்தை போக்க ஆச்சரியமான செயல்கள் கூட உதவும். சொல்லப்போனால், ஆரோக்கியமான வாழ்க்கையில் எதிர்பாராதவாறு ஆச்சரியம் கொடுப்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரிடம் நிச்சயம் ஏதாவது ஒன்றை எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளை அவர்கள் கோபமாக இருக்கும் போது செய்தால், அதுவும் சண்டையை மறக்கச் செய்து, காதலை அதிகரிக்கும்.

* சண்டை ஏற்படும் போது இருவருள் ஒருவர் சண்டை போடுவதை தவிர்க்க, அவர்களது மனதை திசைத்திருப்ப ஏதாவது ஒரு வித்தியாசமான மற்றும் அவர்களது ஆர்வத்தை தூண்டும் ஏதாவது ஒரு தலைப்பைப் பற்றி பேச ஆரம்பித்தால், சில சமயங்களில் கோபத்தை மறந்துவிட்டு பேசிவிடுவார்கள். பிறகு என்ன ஒரே சந்தோஷம் தான்.

* சண்டை வந்துவிட்டால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கு, துணையிடம் மன்னிப்பு கேட்கலாம். அதிலும் வித்தியாசமான முறையில் அவர்களிடம் அந்த மன்னிப்பை வெளிப்படுத்தலாம். உதாரணமாக, பெண்கள் சாரி என்று ஒரு பேப்பரில் எழுதி குளியலறை கண்ணாடியில் மாற்றலாம், ஆண்கள் என்றால் அதேப் போன்று எழுதி சமையலறை, ஃப்ரிட்ஜ் போன்ற இடங்களில் வைக்கலாம். இல்லையெனில் தோப்புக்கர்ணம் போடலாம்.

மேற்கூறியவையே சண்டை வந்தால், சரிசெய்வதற்கான சில டிப்ஸ். இவற்றில் எதை நீங்கள் செய்வீர்கள்?

Monday, October 29, 2012

கருவளையத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்...

இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. அதிலும் தற்போது நிறைய க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. மேலும் அவற்றை பயன்படுத்துவதால், சில சமயங்களில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே அத்தகைய பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே சிறந்தது. இப்போது அந்த கருவளைத்தை போக்குவதற்கான இயற்கைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

* எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.

* பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.

* மற்றொரு முறை ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.

* இல்லையெனில் தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கண்களில் கருவளையம் வருவதற்கு கண்கள் களைப்புடன் இருப்பதும் ஒரு காரணம். ஆகவே இந்த முறை கண்களை புத்துணர்ச்சியாக்கும்.

உண்மையான உறவில் பொறுத்துக் கொள்ள கூடாத விஷயங்கள்!!!

ஒருவரை ஒருவர் உண்மையாக காதலிக்கும் போது, வாழ்க்கைத்துணையின் சில செயல்கள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த உண்மையான காதலில் நம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் மற்றும் பொறுமை போன்றவை இருக்க வேண்டும். அவை இல்லையென்றால், அந்த நேரம் தான் நன்கு யோசிக்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் ஏதேனும் சிறு செயல்கள் கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும். அதிலும் அந்த பிரச்சனை ஒரு முறை வந்துவிட்ட பின்னும், மறுமுறையும் அந்த பிரச்சனையைப் பற்றி உங்கள் வாழ்க்கைத்துணை பேசிக் கொண்டு, அதனை நினைவுப்படுத்தி, மிகுந்த தொல்லையை கொடுத்தால், அப்போது மிகவும் கவனமாக, அவர்களுடன் இருப்பதா? வேண்டாமா? என்று நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். இப்போது அத்தகைய உண்மையான காதலில் என்னவெல்லாம் இருக்கலாம், ஆனால் பொறுத்துக் கொள்ளக்கூடாது என்பதைப் பற்றி அனுபவசாலிகள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* பொதுவாக தம்பதியர்கள்/காதலர்கள் என்றாலே அங்கு நிச்சயம் வாக்குவாதம் இருக்கும். அத்தகைய வாக்குவாதம் சில நேரங்களில் ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அந்த வாக்குவாதம் எப்போது ஒருவர் தவறு செய்த பின்னர், அதனை ஏற்காமல், அந்த விஷயத்திற்கு ஏற்படுகிறதோ, அப்போது அவர்களின் குரல் மற்றும் நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருக்கும். அதிலும் அப்போது என்று நடக்காத வன்முறை செயலான அடிப்பது இருந்தால், அந்த உறவு நிச்சயம் சரியானதாக இருக்காது. இதனால் நாளடைவில் அந்த உறவு ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆகவே அதனை பொறுத்துக் கொள்ளக்கூடாது.
* கடலைப் போடுவது, ஊர் சுற்றுவது போன்றவை கூட சில சமயங்களில் காதலர்களுக்குள் ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அதாவது காதலன் தன் காதலி முன்பே பெண்களுடன் கடலைப்போடுவது. ஆனால் அது உங்கள் வாழ்க்கைத்துணையின் முன்பு நடக்காமல், அவர்களுக்கு பின்பு நடந்தால், அது அவர்களை ஏமாற்றுவதற்கு சமம். இருப்பினும் அவர்கள் உங்களை ஏற்றுக் கொண்ட பின்னரும், மறுபடியும் தவறு செய்தால், அப்போது நிச்சயம் பொறுமையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இதனால் கூட பெரும் பிரச்சனை பிற்காலத்தில் ஏற்படும். ஆகவே இநத் நேரத்தில் நன்கு யோசிக்க வேண்டும்.
* நம்பிக்கை தான் உறவுகளுக்குள் இருக்கும் ஒரு பெரும் தூண். ஆனால் அந்த நம்பிக்கை சரியாக இல்லையென்றால், அவர்கள் எப்போதும் உங்களுக்கு போன் செய்து கொண்டே இருப்பது, உங்கள் மொபைல் போன்களை சோதித்து பார்ப்பது, நண்பர்களுடன் வெளியே செல்ல விடாமல் தடுப்பது போன்றவாறு நடந்தால், அது பெரும் தவறான செயல். ஏனெனில் இந்த செயல்கள் அனைத்தும், உங்கள் வாழ்க்கைத்துணை உங்களின் மீது நம்பிக்கையற்று இருப்பதற்கான அறிகுறி. ஆகவே இது சிந்திக்க வேண்டிய முக்கியமான நேரம்.
* எப்போது உங்கள் வாழ்க்கைத்துணை அவர்களது நண்பர்கள், குடும்பம் முன்பு உங்களை தாழ்வாக நடத்துகிறார்களோ, அந்த நேரம் மிகவும் சீரியஸாக இருக்க வேண்டும். அதிலும் இந்த உலகில் அனைவருமே எப்போதும் பெருமைப்படுத்துபவராக இருக்கமாட்டார்கள். அதற்காக அனைவரது முன்பும் சுயமரியாதையை கெடுக்கும் வகையில் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால், அது மற்றவர்களை மிகவும் உயர்வாகவும், உங்களை தாழ்வாகவும் நடத்துவதற்கு சமம் என்பது போல் இருக்கும். பின் மற்றவர்களும் உங்களை மதிக்காமல், எப்போதும் தாழ்வாகவே நடத்துவார்கள். ஆகவே எப்போதும் சுயமரியாதை கெடும் இடத்தில் இருக்கக்கூடாது.

Saturday, October 27, 2012

உடலால் மட்டுமல்ல உணர்வுகளாலும் இணையுங்கள்!

‘நீ வந்த பின்னாடிதான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சது...' ‘என் உயிரே நீதான்...' இது புதிதாய் திருமணம் ஆன தம்பதியர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள்.
இதுவே சில வருடங்கள் கழித்து என்றால் சின்னச் சின்ன ஊடல்களில் தொடங்கி ‘எந்த நேரத்தில என் வாழ்க்கையில நீ வந்தியோ அப்ப இருந்தே எனக்கு நேரம் சரியில்லை'... என்ற வார்த்தையில் வந்து முடியும்.
தம்பதியர்களுக்கு இடையே சிறு சிறு சண்டைகள், சச்சரவுகள் ஏற்படுவது வாடிக்கைதான். அதுவே பெரிய பூசலாக மாறி விரிசலை அதிகரித்துவிடக்கூடாது. என்றைக்கு மகிழ்ச்சியாக இருக்க சில விட்டுக்கொடுத்தல்கள் வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

உண்மையா இருங்களேன்...
புதிதாக திருமணமான தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தேனிலவு அனுப்புகின்றனர். இது மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டுமல்ல தம்பதியரிடையேயான எண்ணங்களையும், தேவைகளையும் பகிர்ந்து கொள்ளவும்தான். ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து கொண்டாலே வாழ்க்கைப் பயணத்தின் வெற்றி அங்கேயே தொடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

இப்ப எப்படி இருக்கீங்க?
தம்பதியர் இருவருமே திருமணத்திற்கு முந்தைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி துருவி துருவி விசாரணை செய்ய வேண்டாம். அது தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தும். திருமணத்திற்கு பின் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கிறோமா என்பதில் கவனம் செலுத்துங்கள்.

உடனே அப்டேட் செய்யணும்..
கணவனோ, மனைவியோ உங்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் விசயங்களை அவ்வப்போது உங்களின் துணையிடம் அப்டேட் செய்யுங்கள். அப்பொழுதுதான் சந்தேகம் என்ற விதை முளைக்காது. தாம்பத்யத்திலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அதை விடுத்து என்னோட பெர்சனலை ஏன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தால் சந்தோசத்திற்கு சங்கு ஊத வேண்டியதுதான்.

புரிதலும், விட்டுக்கொடுத்தலும்
தம்பதியரிடையே புரிதலும், விட்டுகொடுத்தலும் அவசியம். என் மனைவி இப்படித்தான் என்று கணவனும், என் கணவன் இப்படித்தான் என்று மனைவியும் புரிந்து கொண்டாலே பாதி சிக்கல்கள் தீர்ந்துவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் அப்புறம் சண்டைக்கு வழியே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

எப்பவும் புதுசா இருங்க
நமக்கு திருமணமாகி ரொம்ப நாள் ஆயிருச்சே இனி என்ன என்று நினைக்கவேண்டாம். திருமணமான பொழுது எப்படி புதிதாக உணர்ந்தீர்களோ அதேபோல எப்பொழுதும் புதிதாக உணருங்கள். அந்த நினைவே உங்களை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும். எங்காவது வெளியூர், வெளியிடங்களுக்கு சென்றால் சந்தோசமாக ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு செல்லுங்கள். அது உங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

எங்கேயும் எப்போதும் மதிக்கணும்
நம்ம கணவர்தானே என்று மனைவியும், நம்ம மனைவிதானே என்று கணவரும் ஒருவருக்கொருவர் அந்நியோன்னியமாய் இருந்தாலும் பொது இடத்திலோ, உறவின் முன்னிலையிலோ ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

எதிர்பார்ப்பு அதிகம் வேண்டாமே
ஒருவர் மீது ஒருவர் கூடுதலான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு அது நிறைவேறாவிட்டால் அப்புறம் சிக்கல்தான். எனவே குறைவான எதிர்பார்ப்புதான் அதிகமான நன்மைகளை ஏற்படுத்தும். எனவே ஒருவரின் வேலையை மற்றவர்கள் புரிந்து கொண்டு நேர்மறையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

உணர்வால் இணையுங்கள்
தாம்பத்யதில் இதுதான் முக்கியமானது. தம்பதியரிடையே உடல்களின் சங்கமம் மட்டும் முக்கியமில்லை அது உணர்வுப்பூர்வமானதாக அமையவேண்டும். அப்பொழுதுதான் உடலில் ஆரோக்கியமான ரசாயனங்கள் சுரக்கும். அது தம்பதியரிடையேயான உறவையும் நீடிக்கச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள்.

Wednesday, October 24, 2012

உண்மையான காதல்


உண்மையான காதல்
தோற்பதில்லை ,
உண்மையானவர்களை
தேர்ந்தெடூப்பதில் தான்
தோற்றுப்போகிறோம்...

Saturday, October 20, 2012

கர்ப்பிணிகளே! இந்த மாதிரி ஸ்டைல் பண்ணாதீங்க!!!

இன்றைய காலத்தில் ஃபேஷன் என்ற பெயரில் நிறைய செயல்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர். அத்தகைய செயல்களை கர்ப்பமாக இருக்கம் பெண்களுள் சிலரும் பின்பற்றுகின்றனர். இதனால் அழகாகத் தான் இருக்கும். ஆனால் உடல் நலம் பாதிப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே அத்தகைய செயல்களை கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இப்போது அந்த செயல்களில் எவற்றை கர்ப்பிணிகள் செய்யலாம். செய்யக்கூடாது என்பதைப் பார்போமா!!!

உயரமான ஹீல்ஸ்- தற்போது செருப்புகளில் ஹீல்ஸ் இருக்கும் செருப்புகள் தான் அதிக பிரபலம். அவற்றை சாதாரணமாக இருக்கும் போது அணிந்தாலே உடலுக்கு ஆபத்தானது. அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது அணிந்தால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அசம்பாவிதம் நடக்க நேரிடும். அதிலும் கருசிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இத்தகைய செருப்புகள் அணிவதை தவிர்ப்பது நல்லது.

டைட்ஸ்- ஆடைகளில் பலவிதமான டிசைனில் உடைகள் வந்துள்ளன. அவற்றில் நிறைய பெண்கள் அணிவது டைட்ஸ் தான். இத்தகைய டைட்ஸ் உடலை இறுக்கி, உடலை சிக்கென்று காண்பிக்கும். இவற்றை கர்ப்பிணிகள் நிச்சயம் அணியக்கூடாது. ஏனென்றால் இவற்றால் அடிவயிற்றிற்கு அழுத்தம் ஏற்பட்டு, கருவிற்கு பிரச்சனை ஏற்படும்.

மேக்-கப்- இந்த காலத்தில் மேக்-கப் போடாமல் இருக்கும் பெண்களைப் பார்ப்பதே கஷ்டம். எந்த பெண்ணும் மேக்-கப் இல்லாமல் வெளியே வரமாட்டார்கள். அதிலும் அழகுப் பொருட்களில் சாதாரணமாக பயன்படுத்தும் லிப்ஸ்டிக் மற்றும் நெயில் பாலிஷ் தான் பெரும் பாதிப்பை உண்டாக்கக் கூடியவை. எப்படியெனில் இதில் உள்ள கெமிக்கல் சிறிது வயிற்றில் சென்றாலும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து தான். ஆகவே கர்ப்பிணிகள் அழகுக்காக நெயில் பாலிஷ் போடுவதற்கு பதிலாக மருதாணியை அரைத்து வைக்கலாமே!

ஹேர் கலர்- ஹேர் கலரிங் என்பது அனைவரும் செய்யும் ஒரு செயல் தான். இதை கண்டிப்பாக கர்ப்பமாக இருக்கும் போது செய்யக்கூடாது. ஏனெனில் அனைத்து ஹேர் கலரிலும் அம்மோனியா உள்ளது. ஆகவே இதில் இருந்து வரும் வாசனையை நுகரும் போது குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை அடிக்கடி ஏற்படும். அதனால் எதையுமே சரியாக சாப்பிட முடியாது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது கெமிக்கல் கலந்த ஹேர் கலரை பயன்படுத்துவதை விட, இயற்கை பொருட்களான ஹென்னாவை பயன்படுத்தலாம்.

உள்ளாடை- கர்ப்பிணிகள் எப்போதும் உள்ளாடையை இறுக்கமாக அணியக்கூடாது. ஏனெனில் அவ்வாறு அணிந்தால் கர்ப்ப காலத்தில் உடலில் சுரக்கும் பால் உற்பத்தி தடைபடும். ஆகவே அத்தயை இறுக்கமான உடையை தவிர்த்துவிட வேண்டும்.

ஆகவே கர்ப்பிணிகளே! மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு, நடந்து வந்தால், உடலில் எந்த பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்கலாம்.

Wednesday, October 17, 2012

ரசித்து அனுபவியுங்கள்.. அலங்கோலமாக்காதீர்கள்!


பாஸட் புட் சூப்பரா இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன்றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டுக்குத்தான் அதிகம் வாக்களிப்பார்கள். அதே போலத்தான் செக்ஸும். பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு சாப்பிடுவதை விட வாழை இலை போட்டு ஒவ்வொரு ஐட்டமாக ரசித்து, ருசித்து சாப்பிடுவது போலத்தான் செக்ஸ் உறவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதை நினைத்து நினைத்து இன்புற முடியும்.
செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்வது நல்லது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வை, அதற்குரிய வகையில்தான் தணிக்க வேண்டுமே தவிர அலங்கோலமான வழியில் அதை 'ஆப்' செய்ய நினைத்தால் கசப்புணர்வுதான் இறுதியில் மிஞ்சும்.

சிலர் செக்ஸ் உறவின்போது பல தவறுகளைச் செய்வார்கள். அதைத் தவிர்ப்பது உறவுக்கும், உறவில் ஈடுபடுவோரின் மனங்களுக்கும் நல்லது. அது என்ன தவறுகள் என்பதைப் பார்ப்போமா...

நிறைய முத்தம் கொடுங்கள்

செக்ஸ் உறவின்போது பலரும் செய்யத் தவறுவது நிறைய்ய்ய்ய்ய முத்தம். இருவரும் இணையும் அந்த ரம்மியமான தருணத்தை மேலும் மேலும் இனிமையாக்க உதவுவது எண்ணிக்கைக்குள் வராத அளவு முத்தமிடுவதுதான். இங்குதான், அங்குதான் என்றில்லாமல் நினைக்கும் இடத்தில், கணக்கே இல்லாமல் முத்தமிடுங்கள். இது இருவருக்கும் இடையிலான அன்பை அதிகரிக்க உதவும். அளவு கடந்த ஆசையை தட்டி எழுப்ப உதவும். முத்தத்தைதப் போல ஒரு சக்தி வாய்ந்த எதுவுமே இல்லை. எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் உங்களது முத்தம் அவரை தட்டி எழுப்பி உங்களை ஆனந்தபுரிக்குக் கூட்டிச் செல்லும்.

அவசரப்படாதீர்கள்

உங்களது பார்ட்னரும் செக்ஸ் மூடுக்கு வர வேண்டியது அவசியம். ஆனால் பலர் அவசரம் அவசரமாக எதையாவது செய்து பார்ட்னரை டென்ஷன்படுத்துவார்கள். அதற்குத்தான் நிறைய நேரத்தை முன்விளையாட்டுக்கு செலவிட வேண்டும் என்பது. முன் விளையாட்டை அதிகரிக்கும்போது தானாகவே இருவருக்கும் நல்ல மூடு வந்து விடும்.

சரியான இடத்தில் தொடுங்கள்

முன்விளையாட்டின்போது சிலர் தேவையில்லாமல், உணர்ச்சிகள் அதிகம் வெளிக்கிளம்பாத இடங்களைத் தொட்டும், தடவியும், கடித்தும் மேலும் டென்ஷனைக் கூட்டுவார்கள். அப்படி இல்லாமல், உங்களது துணையை எந்த இடத்தில் தொட்டால் சிலிர்ப்பார், எப்படித் தொட்டால் சிரிப்பார், எந்த மாதிரி தொட்டால் சிலாகிப்பார் என்பதைத் தெரிந்து கொண்டு சரியாக குறி வைத்து விளையாடுங்கள். ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே பொதுவாக கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பகுதிகள் கிளர்ச்சியூட்டக் கூடியவை. அதேபோல ஆண், பெண் உறுப்புகளில் விளையாடுவதும் கிளர்ச்சியைக் கூட்டக் கூடியவை.

பூ போல பாவியுங்கள்

சில ஆண்களுக்கு இந்தக் கெட்டப் பழக்கம் இருக்கும். அதாவது அப்படியே ஒட்டுமொத்த உடலையும் தூக்கி தனது துணை மீது போட்டு அமுக்கி விடுவார்கள். பெண் என்ன இரும்பா அல்லது மரக்கட்டையா, உங்களது வெயிட்டை எப்படித் தாங்குவார்.. அதையெல்லாம் யோசிக்க வேண்டும். பெண்களைப் பூ போல பாவித்து கையாள வேண்டும். பூ மீது பூமி உருண்டையைத் தூக்கி வைத்தால் என்னாகும்.. எனவே மென்மையாக கையாளுங்கள். உடல் எடையை தூக்கி உங்களது துணை மீது வைத்து அவரைக் கஷ்டப்படுத்தாதீர்கள்.

மெதுவா.. மெதுவா...

கிளைமேக்ஸ் ஆண்களுக்கு எப்போதுமே சீக்கிரம் வந்து விடும். ஆனால் பெண்களுக்கு நேரம் பிடிக்கும். எனவே அதற்கேற்ற வகையில் உங்களது உறவின் வேகத்தைக் குறைத்தும், தணித்தும் விவேகமான முறையில் செயல்பட வேண்டும். அவரது இன்பத்தையும், சந்தோஷத்தையும், அனுபவிப்பையும் நீங்கள் மதித்து அதற்கேற்றார் போல நடந்து கொள்ள வேண்டும். விந்தணு வெளியேறுவதை தள்ளிப் போட நிறைய உபாயங்கள் உள்ளன. அதைக் கடைப்பிடித்து உங்களது துணையையும் களிப்பூட்டுங்கள்.

சொல்லாமல் செய்யாதீர்கள்

நீங்கள் வேகமாக உறவில் ஈடுபட்டு அதை விட வேகமாக விந்தணு வெளியிட்டு விடும் நிலை சில நேரங்களில் ஏற்படலாம். அது உங்களது துணைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். அதுக்குள்ளேயும் முடிச்சுட்டீங்களே என்று அவர் விசனப்பட நேரிடும். எனவே எனக்கு உச்சம் வந்து விட்டது என்பதை, வெளியேற்றி விடவா என்று உங்களது துணையிடம் ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள். அதற்கேற்றவாறு உங்களது துணை செயல்பட அது ஏதுவாகும்.

செக்ஸை ஆபாசமாக்கி விடாதீர்கள்

அதேபோல செக்ஸ் உறவை ஆபாசமான விஷயமாக மாற்றி விடக் கூடாது. அது ரொம்ப முக்கியம். செக்ஸ் உறவு என்பது ஒரு கலை. அதை நயத்தோடு அணுகுவதும், செயல்படுத்துவதுதான் நல்ல உறவுக்கு அழகு. நீங்கள் எதைச் செய்தாலும் அதை ரசித்து்ச செய்யுங்கள். மாறாக, அந்தப் படத்தில் அப்படிப் பண்ணானே, நாமும் அதே போலச் செய்யலாமா என்று ஆபாச பட நிலைக்கு கொண்டு போய் விடாதீர்கள். அது சீக்கிரமே உறவு கசந்து போக வழி வகுத்து விடும். அதேபோல சிலர் உறவின்போது படு ஆபாசமாக பேசக் கூடும். அதையும் தவிர்ப்பது நல்லது.

மெஷின் போல இயங்காதீர்கள்

உறவின்போது சிலர் மெஷின் போல, மரக்கட்டை போல இருப்பார்கள். அதுவும் தவறு. ஏதோ ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது போல சில ஆண்கள் இயங்கக் கூடும். அதுவும் தவறு. ரசித்து, ஒவ்வொன்றையும் ருசித்து, அனுபவித்து, அழகியலோடு செய்யும்போதுதான் உறவுகள் இனிக்கும், சுவைக்கும். உங்களது கலா ரசனையாலும், கற்பனைத் திறனாலும் உங்களது துணையைக் கட்டிப் போட வேண்டுமே தவிர 'டிரில்லிங் மெஷினைக் கொண்டு சுவற்றில் ஆணி அடிப்பது' போல செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

Friday, October 12, 2012

மனைவியை அதிகமாக கோபப்பட வைப்பது எது தெரியுமா?

 திருமணமானவர்களுள் ஆண்கள் அனைவரும் தன் மனைவியை ஒரு பெரிய இராட்சசி என்று சொல்வார்கள். ஏனெனில் எப்போது பார்த்தாலும் மனைவிகள் அனைவரும் அவர்கள் கணவர்களை கோபத்தால் திட்டிக் கொண்டே இருப்பதால், ஆண்கள் பலர் தன் மனைவிகளை பற்றி மனதில் தவறாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு நடப்பதற்கு உங்கள் மீதுள்ள பாசம் தான் காரணம். அதனால் தான் அவர்கள் உங்களுடன் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

மேலும் உண்மையான பாசம் இருக்குமிடத்தில் தானே கோபம் இருக்கும். பாசம் யார் மீது வைத்துள்ளோமோ, அவரிடம் தானே உரிமையோடு கோபம் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் முக்கியமாக மனைவிகள் எப்போதும் தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள். அவர்கள் கோபப்படுகிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் எப்போதும் பிரச்சனையை உருவாக்கி கோபப்பட வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை. அவர்களுக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு நிச்சயம் கணவர்களது செயல்களால் தான் இருக்கும். இப்போது கணவர்களது எந்த மாதிரியான செயல்கள் மனைவிகளுக்கு கோபத்தை உண்டாக்குகின்றன என்று பார்ப்போமா!!!

* ஆண்கள் அதிகமாக சம்பாதித்து நன்கு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் சாம்பாதித்தால் மட்டும் சந்தோஷம் வந்துவிடுமா என்ன? சந்தோஷம் வருவதற்கு வேலை செய்யும் நேரங்களில் வேலை செய்து, மற்ற நேரங்களில் மனைவியுடன், குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். அதைவிட்டு, அலுவலகங்களிலேயே செலவழித்தால் யாருக்கு தான் கோபம் வராது. அதிலும் எப்போதாவது வேலை இருந்தால், அதைப் புரிந்து கொண்டு மனைவி கோபப்படமாட்டாள். ஆனால் அளவுக்கு மீறி போனால், கண்டிப்பாக பத்திரகாளியாகத் தான் மாறுவாள்.

* வேலைக்கு செல்லாத மனைவியிடம் மாலை நேரத்தில் வெளியே செல்லலாம் என்று சொல்லிவிட்டு, செய்யவில்லை என்றால் கோபப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் நாள் முழுவதும் வீட்டிலேயே தான் இருக்கிறார்கள். அத்தகையவர்களை வாரத்திற்கு ஒரு நாள் தான் வெளியே அழைத்து செல்வதாக சொல்லியிருப்பீர்கள், அதைக்கூட சரியாக செய்யாமல் இருந்தால், கோபம் வராதா என்ன? ஆனால் உண்மையில் அதிக வேலையின் காரணமாக களைப்பாக உள்ளது என்று அழைத்து செல்ல முடியவில்லை என்றால், அதைப் புரிந்து கொண்டு பேசாமல், அன்புடன் வீட்டிலேயே சந்தோஷமாக இருப்பார்கள். அதைவிட்டு பொய் கூறினால், நிச்சயம் அவர்களது கோபத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

* வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால், அவர்கள் எப்போதும் கணவர்களது சம்பளத்தை எதிர் பார்க்க மாட்டார்கள். ஆனால் வேலைக்கு செல்லாதவர்கள் என்றால் அவர்கள் குடும்பத்தை சரியாக நடத்துவதற்கு கணவரிடம் பணத்தை எதிர் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் எந்த ஒரு சிறு செலவிற்கும் அவர்கள் தன் கணவனை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை. சிலசமயங்களில் அவர்கள் தரமுடியாது என்று சொல்லி, பணம் கொடுப்பதற்கு மறுப்பார்கள். அதிலும் மனைவிகள் தேவையில்லாத செலவிற்கு கேட்டு கொடுக்காமல் இருந்தால் பேசாமல் இருப்பார்கள். ஆனால் முக்கியமான செலவிற்கு கேட்டு கொடுக்கவில்லையென்றால், அந்த நேரத்தில் வரும் கோபத்திற்கு அளவே இருக்காது.

* கூட்டுக் குடும்பத்துடன் இருக்கும் போது, அதாவது மாமனார், மாமியாருடன் இருக்கும் போது, கணவர்கள் செய்யும் ரகளைக்கு அளவே இருக்காது. ஏனெனில் நாள் முழுவதும் மனையானவள் வீட்டு வேலை செய்து, பின் இரவில் படுக்கும் போது தன் கணவரிடம் அன்று நடந்ததை சொல்லி நியாயம் கேட்க வேண்டும் என்று இருக்கும் போது, கணவர்கள் மனைவியிடம் இருக்கும் நியாயத்தை பொருட்படுத்தாமல், அவர்களது அப்பா, அம்மாவிற்கே எப்போதும் சாதகமாக பேசினால், கோபம் வந்து பிபி எகிறும் அளவிற்கு பேசுவார்கள்.

ஆகவே கணவர்மார்களே! மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு உங்கள் திருமண வாழ்க்கையை நன்கு மகிழ்ச்சியானதாக மாற்றுங்கள்.

Tuesday, October 9, 2012

கர்ப்பமா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும்

பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் தான் பிரசவத்திற்கு முன். ஏனெனில் இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், அது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே எப்போதும் அலட்சியமாக இல்லாமல், எந்த நேரமும் கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு கர்ப்பிணிகளுக்கு என்று ஒருசில அடிப்படை விதிகளும் உள்ளன. இப்போது அந்த அடிப்படை கவனம் என்னவென்று பார்ப்போமா!!!

* கர்ப்பமாக இருக்கும் போது முக்கியமானது, வீட்டில் உள்ள தரைகள் எப்போதும் ஈரமின்றி இருக்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு இருந்தால், எந்த நேரத்திலும் வழுக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வீட்டில் இருப்பவர்கள், இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

* கர்ப்பத்தின் போது எந்த ஒரு சூடான பானத்தையோ, உணவையோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவை தடுமாறி உடல் மேலே விழுந்து காயம் ஏற்பட்டுவிட்டால், அது பிரசவத்தின் போது பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

* கர்ப்பிணிகளுக்கு ஒருசிலவற்றை செய்யும் போது சற்று கஷ்டமாக இருக்கும். உதாரணமாக, உயமான கட்டிலில் படுத்து எழுந்திருக்கும் போது, உட்கார்ந்து எழுந்திருக்கும் போது என்று கஷ்டம் ஏற்படும். இதனால் பெல்லியில் சிறிது அழுத்தம் ஏற்பட்டு, சிலசமயங்களில் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதாவது வழுக்கிவிடும் நிலை ஏற்படும். ஆகவே அந்த நேரத்தில் எது சுலபமாக உள்ளதோ, அதைப் பின்பற்ற அல்லது பயன்படுத்த வேண்டும்.

* கர்ப்பிணிகள் அணியும் உடை சற்று உடலுக்கு ஏற்றவாறு அணிய வேண்டும். அதாவது உடை மிகவும் டைட்டாகவோ அல்லது நீளமாகவோ இருக்க கூடாது. இல்லையெனில் தடுக்கி விழும் நிலையோ, டைட்டாக அணிவதால், வயிற்றிற்கு அழுத்தமோ ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

* வேலை செய்யும் போது கடினமான வேலையை செய்ய வேண்டாம். சிறு வேலைகளை மட்டும் செய்தால் போதுமானது. அதற்காக வேலை செய்யாமலும் இருக்க கூடாது.

* கர்ப்பத்தின் போது பெண்கள் ஓடவோ, குதிக்கவோ கூடாது. இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். அதற்காகத் தான், நிறைய மருத்துவர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்களை பயணம் செய்யக்கூடாது என்று சொல்கின்றனர். ஆகவே பயணத்தை தவிர்க்க வேண்டும்.

* அனைத்து பெண்களுக்கும் சாதாரணமாக இருக்கும் போது நாவில் இருக்கும் சுவை, கர்ப்பத்தின் போது வேறுபடும். இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. ஆகவே இந்த நேரத்தில் சற்று உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டால், தாய்க்கும் சேய்க்கும் நலம்.

ஆகவே கர்ப்பிணிகளே! மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து செயல்பட்டு, அழகான குழந்தையை ஆரோக்கியத்துடன் பெற்றெடுங்கள்.

Monday, October 8, 2012

Smile


Before I met you, 
I didn't know 
what it was like to smile 
about someone for no reason.